தேடல்

எங்கிருக்கிறாய் நீ..

ஒரு நொடி வானவில்லாய் வந்து..
மனமெங்கும் வண்ணம் பூசி ...
கானல் நீராய் கரைந்தும் போனாயே ..!.

உன் தயக்கமே என்னுள் மயக்கம் தர ..
நீ பேசினால் என்னாவேனோ ..?

கிட்டத்து பார்வை...!
தூரத்து பார்வை.. !
எப்பார்வையிலும்
இப்பாவை முகமே முன்னால்...!!

உன் விழி மொழிக்கு பொழிப்புரை தர
இன்னும் எம்மொழியிலும் அகராதி இல்லை ..
அதனால் நீ "அகராதி" கொள்ளாதே...!

பெயர் கூட சொல்லாமல்
பேய் பிடித்து ஆட்டுகிறாய் ...
எனக்கும் பேய் பிடித்து தான் போனது ...!

நெருங்க நினைக்கையிலே
நெடுந்தூரம் போனாய் ...
நொறுங்கிய என் இதயம்
தேடுது உனையே தானாய்...!

கடும் பாறையிலும் பூ பூத்து
"பூப்பாறை" என பெயர் மாற்றம் செய்து கொண்டது ..!

எதிர்பாரா முகம் ..
எதிர்பார்த்த வரம் ...
உனை தேடியே யுகம்
முடிந்தாலும் சுகம் ...!

தொலைந்த பின்னும்
தேடியே தொலைகிறேன் ...
தேடல் சுகமே ...!!!!

எழுதியவர் : குணா (13-Sep-18, 10:38 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : thedal
பார்வை : 128

மேலே