நீ மட்டும் போதுமடி

★ கட்டிப்போடும்
குட்டிக்கவிதைகள்
வேண்டாம் -- நீ மட்டும்
போதுமடி! ★
★ எண்ணங்களை
எட்டிப்பிடிக்கும்
வானம் வேண்டாம் -- நீ மட்டும்
போதுமடி! ★
★ இரவுகளை
இனிமையாக்கும்
கனவுகள் வேண்டாம் -- நீ மட்டும்
போதுமடி! ★
★ தோல்வியைத்
துரத்தும்
வெற்றி வேண்டாம் -- நீ மட்டும்
போதுமடி! ★
★ வாசிக்க
வார்த்தைகள் கூட
வேண்டாம் -- நீ மட்டும்
போதுமடி!
★ சுவாசிக்க
மூச்சுக்காற்று கூட
தேவையில்லை -- நீ மட்டும்
போதுமடி!