டோரா

குள்ள நரி திருட கூடாது
என்கின்றது, மழழைகள்

அவர்களுக்கு என்ன தெரியும்
அவன் இதயத்தை திருடியது
டோரா என்று
.........................

எங்க நாம போறோம்,
என்கின்றாள் மேப்பிடம்! டோரா

அவள் வர போவது தன்
இதயத்திடம், என மேப்பை
மாற்ற போகிறது குள்ளநரி
.........................

வண்ண வண்ண நட்சத்திரத்தை
துரத்தி பயண படுகிறாள் டோரா!

சின்னசிறு காதலியை துரத்தி பயணிக்கிறது
குள்ளநரி
.........................

எங்கே மேப் எங்கே புஜ்ஜி
என தேடுக்கின்றாள் டோரா

தன்னை ஒரு கணமாவது அவள்
நினைக்க மாட்டாள என ஏக்கத்தில்
குள்ளநரி
.........................

முடியாமல் தூக்கிறாள் அவள்
பேக்கை,
அறிந்ததால் அருகில் வருகிறது
குள்ளநரி,
இது அறியாமல் அலறுது
மழலைகள்
குள்ளநரி குள்ளநரி குள்ளநரி என்று

எழுதியவர் : நவின் (5-May-17, 1:40 pm)
சேர்த்தது : நவின்
பார்வை : 220

மேலே