ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது !
மீனவர்கள் - இலங்கை என்று
செவிகளில் விழும் போதெல்லாம்
இந்த பாடல் வரிகளும் சேர்ந்தே விழுகிறது !!
என்ன தான் நடக்குது
இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ?
இவ்ளோ பெரிய நாடு இலங்கைகிட்ட
ஏன் தான் அடிபணிஞ்சு போகுதோ ?
கேள்விகளோடு நாமும் அவ்வப்போது
கடல் அலை போல எழுந்து மறந்து விடுவோம் .
யார் வகுத்த அரசியல் தந்திரமோ
இன்றுவரை தழுவல்கள் தவறாது - கடைபிடிக்க
மீனவனுக்கு மட்டும் தடைக்காலம்
நீண்டு கொண்டே போகிறது அந்த நீலக்கடல் போல .....
மீனவன் பிடிப்பதும் மீன் அவனை
பிடிப்பதுமான காலம் பழையது !!
மீனவன் பிடிப்பதும் இலங்கை
மீனவனைப் பிடிப்பதும் தான் புதியது !!
எத்தனை முறை சிந்தித்தாலும் சிந்தைக்கு
எட்டாத அறிவாய் சில கேள்விகள் உண்டு
இந்தியரில் தமிழன் மட்டும் சுடப்படுவது ஏன் ?
அதற்கு சிங்களனுக்கு தமிழகத்திலேயே
பயிற்சி தரப்படுவதும் ஏன் ?
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த
உண்மைய சொன்ன ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க அதுக்கு
கத்து கொடுத்தவன் யாருங்க .............????