மலட்டு தாய்
மாமியார் : சம்பளம் வாங்காத வேலைகாரி
மருமகள் : சம்பளம் கொடுக்காத முதலாளி
முதல் மூன்று மாதங்கள் மூழ்கிய
களி காதலில் தனித்திருக்க
ஏனைய ஏழு மாதங்கள்
சேர்த்துக்கொள்வாள் மாமியாரை.......
பிள்ளை பெற்று ஐந்து நாட்களில்
அழகு மேனிக்கு பவுடர் போட்டு அவள் திறிய
பவுடர் பால் கொடுத்து சென்றிடுவாள் பிள்ளைக்கு.......
குத்தவச்சு, குளிப்பட்டியதும் இல்லை, குண்டி கழுவியதும் இல்லை.....
பொட்டுவச்சு, பூச்சூட்டி,அழகு பார்த்ததும் இல்லை...
தூக்கிவச்சு, நிலவு காட்டியதும் இல்லை,
கதை சொல்லி சோறு ஊட்டியதும் இல்லை,
பாட்டிசைத்து தாலாட்டியதும் இல்லை .....
கைதட்டி, எட்டுவச்சு நடை பழக்கியதும் இல்லை,
எடுத்துவச்சு கொஞ்சியதும் இல்லை....
அம்மா என்ற பட்டம் மட்டும் பெற்றுவிட்டால்....
பெற்றதனால் தாய் ஆனால்,
வளர்ப்பதில் மலடானால்......
அழுத பிள்ளையை
அரவணைக்க நேரமின்றி
அம்மா என்று அழைக்கும் முன்னே
அருகில் உள்ள பள்ளி சேர்த்துவிட்டாள் .....
(அனைவரும் இப்படி இல்லை
இது நான் பார்த்த ஒருத்தி )