a.lawrence- கருத்துகள்
a.lawrence கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [94]
- கவின் சாரலன் [36]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [19]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- C. SHANTHI [15]
கணக்கு எனக்கு பிடிக்காத / வராத பாடம் ,எனினும் நீங்கள் சொன்ன கணக்கு புரியும் படியே இருந்தது . முகநூல் குறித்த உங்களின் எண்ணம் அத்தனையும் சரியே , வாழ்த்துக்கள் ....
அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என்று மனிதன் பொறாமை படாத விடயம் " மரணம் " - படித்ததில் பிடித்தது - இங்கு பகிர்வது பொருத்தமானது என்று எண்ணுகிறேன் . படைப்பு அருமை சகோதரி !!!
சிறப்பான வரிகள்
ஓவியம் கடலாய் தெரிகையில் எழுத்து அதில் கரைந்து தான் போகிறது . எழுத்து கடலில் சூரியனாய் தெரிய இன்னும் சிரத்தை எடுங்கள் . வாழ்த்துக்கள் .
ஓவியத்தில் கை தேர்ந்த சகோதரி கவிதையிலும் ஜொலிப்பது அருமை !!
வார்த்தையிலும், வரைந்தது அழகு !!!
நல்லாருக்கு !!
நடந்தது ஏதும் இல்லை என்று நீங்கள் சொன்னாலும் , உங்களின் அனுபவம் அதை நம்ப வைக்க மறுக்கிறது . மிக்க நன்றி லாரன்ஸ் என்று மட்டும் முடித்திருந்தால் நீங்கள் சொல்லுவதை நான் நம்பி இருப்பேன் . அடுத்து நலமா... என்று நீண்ட நாள் காணாத என்னை நலம் விசாரித்து ஒரு கமா போட்டு விட்டீர்கள் அல்லவா , அது தான் உங்களின் அனுபவம் . நலம் என்று நான் சொல்லி விட்டால் உங்களின் மனமும் அமைதி கொள்ளும் , இல்லை என்றால் முகம் காணாத எனக்காகவும் கவலை படுவீ ர்களே இந்த மனம் எல்லோருக்கும் அமையாதே ? நான் நலம் நீங்கள் ?
அக்கா , உங்களின் கருத்துடன் உடன் படுகிறேன் . சமீபத்தில் 36 வயதினிலே படம் பார்த்தேன் , அதில் நிறைய வலிகள் படமாக்கப்பட்டிருந்தது . இயந்திரங்களாக உள்ள கணவன்களுக்கு அது ஒரு நல்ல பாடமாகவும் உள்ளது .
கடந்திட்ட காலத்தை கருத்தில் சொல்ல பொருத்தமான ஆள் தானே நீங்களும் !!! தன்னலம் கருதாமல் சொல்லும் கருத்தை, வரும்காலம் எப்படி தவிர்த்து செல்லும் ?
நிழலாடும் அவன் நினைவு , நிஜத்தில் நின்றாட , வேண்டி வாழ்த்துகிறேன் சகோதரி , வரிகள் - வலிகள்.
வயிறிற்கே வழியில்லாத பொது
கயிற்றிற்கெதற்கு
அரைப்பவுனில் அலங்காரம்?
அட்டகாசம் .
கவிதை அழகு , ஓவியம் இன்னும் கொஞ்சம் அழகு , உங்களின் கையொப்பம் ரொம்ப அழகு . இன்னும் வளர முருகனையே வேண்டுவோம் !!!
அக்கா , நல்ல வேளை என்னையும் எழுத்தில் கொண்டுவராமல் விட்டீர்கள் !!! இயந்திரமாய் இருந்துவிட்டு பழைய நினைவுகளுக்குள் இப்போதுதான் வந்தேன் . கால ஓட்டத்தில் சிக்கி , திசை தெரியாமல் எங்கோ போய் விட்டு , ஊதாரி மைந்தன் போல சொந்த வீட்டுக்குள் திரும்பி வந்துள்ளேன் ...அப்பா என்று அழைக்காமல் அக்கா .......என்று அழைத்தவாறு .......
உங்களின் நெஞ்சிலும் அந்த தீ எரிவதை வார்த்தைகளில் உணரமுடிகிறது . உணர்வுக்கும் எழுத்துக்கும் நன்றி தோழரே !!
குமரி , வாசிக்க தொடங்கியதும் அம்மாவின் மூச்சுக்காற்று இதய பலூனில் நிரம்பியது ...........முடிக்கும் போது இதயம் வலி தாங்காமல் வெடித்து கிழிந்தது ....நன்று
பரிக்கு கிரியும் வரியென்றாகும் = பரி = குதிரை கிரி = மலை , பன்றி
வரி = ?
சண்டிக்குதிரை இல்லை - இது
நொண்டிக் குதிரை இல்லை
அன்புமனம் கண்டால் - இது
மண்டியிட்டு தலையும் வணங்கும்!!! - அருமை சகோதரி
எம்மொழியும் தமிழுக்கு ஈடாமோ?? - இல்லை தான் . ஆனால் நீதான் நாம் நிறைய மொழிகளில் புலமை பெற்று இதை பாரதியை போல் சொன்னால் நலமாய் இருக்கும் .
சகோதரி , " கற்பனையில் செல்வதே இதமாக இருக்கிறது என்றால், உண்மையில் சென்றால் எப்படி இருக்கும்?? " என்று நீங்கள் சொல்லுவதால் சொல்லுகிறேன் , பைபளில் கடைசி புத்தகம் வாசித்தால் நீங்கள் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும் . இன்னும் நிறைய எழுதுங்கள் . வாழ்த்துக்கள்
மரியாதைக்கும் அன்புக்கும் உரிய சகோதரி முதலில் என்னை மன்னித்து விடுங்கள் , உங்களின் இந்த கவிதையை முதலில் வாசித்திருக்க வேண்டியவன் , கண்ணீரோடு கடைசியாய் வாசித்து முடிக்கிறேன் . ஒரு மாதத்துக்கும் மேலாய் இன்னொரு உலகத்தில் இருந்து விட்டதை எண்ணி எண்ணி கண்ணீர் துளிகளை உதிர்துக்கொண்டிருக்கிறேன்.
" விழி மூடிய வேளையில்
வெளியேறிய என் ஆன்மா
காற்றில் மிதக்கிறேன்
இலேசான உணர்வுடன்!!! " எங்களை எங்கோ அழைத்துச்செல்ல போகிறீர்கள் என்ற உணர்வு தொற்றிக்கொண்டது .
" என் உடலை நானே காணும்
விந்தை நிகழ்வு
சாத்தியப் படுகிறது
ஆன்மா உடலைப் பிரிதலில்!!!
வலிகளும் அழிவும்
உடலுக்குத்தான்
ஆன்மாவிற்கு அல்ல
வலியற்ற ஆன்மா
வளியோடு வளியாய்... " எளிமையான புதிய வரிகள் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை .
" சொந்தபந்தங்கள் எனை சுற்றி
கண்ணீர் உகுத்தபடி
என் ஆன்மா அழவில்லை
ஆன்மாவிற்கு கண்ணீருமில்லை!!! " " ஆன்மாவிற்கு கண்ணீருமில்லை " கண் பார்வைக்கு நிழல் ஆனால் இது நிஜம் .
" காற்றோடு என் ஆன்மா
கைகோர்த்துக் கொண்டு
பூமியைவிட்டு நழுவி
வான் நோக்கி மேலெழுந்தவாறே
ஓர் உன்னத அனுபவமாய்..." இந்த வரிகளோடு வாசகனும் பயணப்படுவது உங்களுக்கு கிடைத்த வெற்றி .
" விமானத்தில் பறக்கவில்லை
மரண சீட்டு வாங்கிகொண்டு
ஓசியில் ஆகாசப் பயணம்
மேகக் கூட்டத்தை உரசிக் கொண்டு!!!
நீரை சுமந்த மேகக் குளிர்ச்சியில்
ஊடுருவியும் கடந்தும்
கும்மிருட்டுக்குள்
ஆன்மாவின் பயணம்
ஒளிவடிவில் பிரகாசமுடன்
உயரத்தில்...அதி உயரத்தில்....
இனம்புரியாத ஓரிடம்
ஆங்காங்கே ஒளி உருவங்கள்
என் தந்தை.. என் உறவினர்கள்
என்றோ உடலைத் துறந்தவர்கள்....
வரவேற்கிறார்கள் உருவமின்றி
உணர்கிறேன்
ஒளி தோற்றங்களில்
அவரவரின் அடையாளங்களை " உங்களின் கற்பனைகள் கலந்த இயற்கையின் அனுபவங்கள் . அருமை சகோதரி .
" சில ஆன்ம வெளிச்சங்கள்
அடுத்த பயண ஆயத்தங்களில்
உடல் கிடைத்த ஆனந்தத்தில்
பூமி நோக்கிய பயணங்கள்
பிறவி ஆசை விடாதவர்கள்... " கிறிஸ்தவமும் இந்து மதமும் வேறுபடுகின்ற இடம் - ஆன்மா பூமிக்கு திரும்பாது என்கிறதே கிறிஸ்தவம் .
" பேரொளியைச் சுற்றிலும்
ஒளிக் கும்பல்கள்
பிறவிகளைக் கடந்தவர்களாய்
இறைவனை சரணடைந்து...
மகிழ்ச்சிக் கடலில்
நான் மூழ்கியபடி....
நான் பேராசைகொண்ட
இடம் வந்துவிட்டது
இன்பமயமான உலகம்
இனி பூமிவரும் ஆசையில்லை
உடல் தேடும் எண்ணமுமில்லை... " இது பேராசை இல்லை சகோதரி நம் படைப்பின் நோக்கம் - நாம் போய் சேர வேண்டிய இடம் தானே ?
நான் சிந்திய கண்ணீர் துளிகள் தான் உங்களுக்கு பரிசு .................