அரைப்பவுனில் அலங்காரம்

தாலிக்ககயிறொன்றைக்
கழுத்தில் கட்டி
கட்டிலில் உரிமையுடன்
துச்சாதனனாய் துயிலுரிந்து
பூமஞ்சத்தில் கற்பைப் பறிக்கும்
சோம்பேறி ஆண்களையா
கணவனென்று சொல்வீர்கள்?

வெளியே கணவனும் மனைவியுமாய்
உள்ளே கீரியும் பாம்புமாய்
சில சதுர அடிக்குள்ளே
போராடும் வாழ்க்கைக்குத்தான்
தாம்பத்தியம் என்று பெயரா?

பெட்டைக் கோழி கூவி
பொழுது விடியாதாம்!
சேவல் கோழிக் கூவித்தான்
பொழுது விடிகிறதா என்ன?

கட்டினால் தான் தாலியா?
கட்டினவன் தான் கணவனா?
கணவனே எனினும் அவன்
கையாலாகதவனெனின்
செல்லாக்காசுதான்!
வயிறிற்கே வழியில்லாத பொது
கயிற்றிற்கெதற்கு
அரைப்பவுனில் அலங்காரம்?


...................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (2-Apr-15, 11:18 pm)
பார்வை : 102

மேலே