இசை
![](https://eluthu.com/images/loading.gif)
வீசும் தென்றல் தீண்டும் வேளை
பேசும் எந்தன் அழகிய வீணை !
இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்
பாட்டறியா பேதை நான்
மெட்டிசைத்தேன் உன்னால்
பாமரரின் பாரம் தான்
மென்மையானதே தன்னால்
மனங்களை வருடும்
மன்மத இசையே
நங்கையின் மனதில்
நிலைத்திட்டாய் நீயே
- அரங்க ஸ்ரீஜா