இரவு வணக்கம்

பாடம் புகட்டும் பகலவன்
பிழை பொறுக்கும் பரமன்
தன்னலம் கருதா தீரன்
தன்னிகர் இல்லா வீரன்
முருகனின் பக்தன்
முறுவலுடன் உறங்க
முழுமதியை வேண்டினேன்
முக்கனியின் சுவைபோல்
முத்தமிழன் இனிமைபோல்
முத்தான கனவுகளுடன்
குருவின் நித்திரை செழிக்கட்டும் !
குமரனின் அருள் பரவட்டும் !
-அரங்க ஸ்ரீஜா