தமிழ் அமிழ்து

தமிழ் அமிழ்து.....
=================

செம்மொழியான தமிழ் மொழியாம்
தேனினும் இனிய கனி மொழியாம்
தமிழ் தேவர்கள் கடைந்த அமிழ்திதுவாம்
உண்ணத் திகட்டாத உயர் மொழியாம்!!!

கம்பன் கட்டிய காவிய கோட்டை
தமிழை குழைத்து வடித்த ஒளிக் கோட்டை
யுக யுகமாய் தமிழ் பேசி நிற்கும்
உயர் தமிழுக்கு பெருமையை கூட்டி வைக்கும்!!!

வள்ளுவன் போதித்த வாழ்விலக்கியங்கள்
வையமே போற்றிக் கொண்டாடிடுதே
தமிழ் மொட்டுக்கள் சேர்த்திட்ட பூமாலை
அணிந்தோர் வாழ்வில் இன்னல் இல்லை!!!

எத்தனை காவியம் பைந்தமிழினிலே
அத்தனையும் தேன்வழி பலாசுளையே
தினம் சுவைத்திட சுவையது மாறிடுமோ??
எம்மொழியும் தமிழுக்கு ஈடாமோ??

சொக்க வைக்கும் தமிழ் சில சமயம்
போதை ஏற்றும் தமிழ் பல சமயம்
மமதை கொள்வோம் தமிழனென்று
இகமதை வெல்வோம் நல் தமிழ் கொண்டு!!!

வடித்திட... வடித்திட.. கவிதையது
பாடிட... இனித்திடும் கானம் அது
தமிழ் எடுத்திட குறையா சுரங்கமது
தொழுதிட... தொழுதிட தெய்வமது!!!

எழுதியவர் : சொ. சாந்தி (18-May-14, 4:50 pm)
Tanglish : thamizh amilthu
பார்வை : 632

மேலே