வியாக்கியானம்
இருப்பதில் உவப்பதே இனிமை என்றால்!
இயலா ஆசைகளில் மனம் லயிப்பதேன்! துவளுவதேன்!
வரையறை கொண்ட வாழ்க்கையில் வருத்தங்கள் குறையும்! ஆனால் அர்த்தமுன்டா!
நாளைய நிகழ்வின் நடப்பறிந்தால் நிம்மதி கெடும்!
மதி கெட்டு விதி ஆளும்!
வெற்றி தோல்வி விளையாட்டே வாழ்க்கை என்றால் தோல்வி தரும் வினை மட்டும் மிகையாவதேன்!
எதார்த்த இயல்பாய் இருப்பதிலும் ஏளனங்கள் ஏன் இத்தனை!
விருப்பங்கள் எல்லாம் ஏக்கங்களாகும் இளமையின் விரக்தி ஏன்?
விடை காணா வினாக்களின் வியாக்கியானங்கள்!!விபரீதங்கள்!!!