கடிவாளமிட்ட குதிரை

கடிவாளமிட்ட குதிரை...
======================


கடிவாள மிட்ட குதிரை

சிதறாது இதன் யாத்திரை

கடிவாளம் கடித்த போதும்

நீக்காது நீளும் பயணம்!!!


இன்ப துன்பம் யாவும்

இதன் சொந்த பந்தமாகும்

துன்பம் சாய்த்தபோதும் - குதிரை

விழுந்தும் எழுந்து ஓடும்!!!


வலியை திரட்டிச் செய்த தேகம்

வலி எதுவென்றாலும் தாங்கும்

தோல்வி தாக்க வந்தால்

தோல்வி தோற்று ஓடும்!!!


பயண வழியில் தினமும் - வழி

போக்கர்த் தொல்லை யதிகம்

தடையைப் போட்டு நாளும்

பரியை இடற வைக்க பார்க்கும்!!!


தடைகள் கிரியுமென்றால் - இது

எகிறித் தாண்டும் குதிரை

மனதில் திடமும் கொள்ளும்

பரிக்கு கிரியும் வரியுமாகும்!!!


சண்டிக்குதிரை இல்லை

நொண்டிக் குதிரை இல்லை

அன்புமனம் கண்டால்

மண்டி யிட்டுதலையும் வணங்கும்!!!


வானம் எல்லை வைத்து - குதிரை

சிறகு விரித்து பறக்கும்

கடல் குதிரையாக மாறி - ஆழி

ஆழம் கண்டும் ரசிக்கும்!!!


பணயக் குதிரையில்லை - இது

பயணம் செய்யும் குதிரை

இடர் எது வந்தாலும் நோக்கும்

எதிலும் வெற்றி கண்டு களிக்கும்!!!


#சொ .சாந்தி


எழுதியவர் : சொ. சாந்தி (14-May-14, 8:21 am)
பார்வை : 608

மேலே