மாறிடுமா மண்ணில் இந்த நிலை

அன்பெனும் அறனும் அழிகிறது
ஆற்றலும் அகிலத்தில் குறைகிறது
இரக்கமெனும் பண்பும் மறைகிறது
ஈகையெனும் குணமும் தேய்கிறது
உயர்ந்தவர் தாழ்ந்தவர் எண்ணமாகிறது
ஊக்கம் தரும் உரைகள் முடங்கி போனது
என்றும் இன்பம் எனும்சொல் கல்லானது
ஏக்கமே எதிலும் எங்கும் நிறைந்துள்ளது
ஐயமே அகிலத்தில் எதிலும் தோன்றுகிறது
ஒற்றுமை என்பதே நிலை குலைந்தது
ஓரினம் தமிழினமும் பிளவுபடுகிறது
ஔவையின் அறிவுரை அழிந்துவிட்டது !

சாதிவெறி தலை விரித்தாடுகிறது
மத மாச்சர்யம் மனதில் தேங்குகிறது
அரசியல் இங்கே ஆடுகளமாகிறது
அனுபவம் இன்று மிதிக்கப்படுகிறது
பாசமும் நேசமும் பழங்கதையாகிறது
பண்பும் பகையும் முட்டி மோதுகிறது
வன்மமும் வன்முறையும் கூடுகிறது
போட்டியும் பொறாமையும் வழிகிறது
மறைமுக தாக்குதல் வழக்கமாகிறது
பேராசைத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது
அமைதியும் ஆனந்தமும் அறவே அகன்றது !

இவையே இன்றைய உலகின் நிலை !
மாறிடுமா மண்ணில் இந்த நிலை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-May-14, 9:29 am)
பார்வை : 514

மேலே