எம தர்மங்கள் Mano Red
எமன்...!!
கொல்லப் பிறந்தவன்,
யாரிடமும் ஏமாறாதவன்,
எப்படியும் ஒருநாள்
ஏமாற்றாமல் வருபவன்...!!
பாசத்திற்கு மயங்காதவர்
பூவுலகில் எவருமில்லை என்ற
பிண்ணனி அறிந்தே
பாசக் கயிறு கொண்டு
பாசமாய் இழுக்கிறான் போல..!!
எல்லாம் மேலே இருப்பவன்
பார்த்துக் கொள்வான் என
விதியை நாம் நம்புவது தெரிந்தே
விதிகள் மீறாத விதியுடன்
பார்த்து பார்த்து கொல்கிறான் போல..!!
மண்ணாசை கொள்ளவே
மனிதன் பிறந்தான் என்று
யார் கூறி எமன் கேட்டானோ..??
மண்ணோடு மக்கிப் போகவே
சுடுகாட்டிற்கு அழைக்கிறான் போல.!
செய்த பாவம் மறைக்கவே
புண்ணியம் தேடுகிறான்
பாவப்பட்ட பாவ மனிதன்...!!
எமனும் செய்த பாவம் குறைக்கவே
மனிதன் கொன்ற புண்ணியம் வைத்து
பாவங்கள் குறைக்கிறான் போல..!!
நாம் பிறந்த உடனே
நம்மை நோக்கி
எமன் கிளம்பி விடுகிறானாம்..!!
எருமை மாட்டில் வருவதற்கு தான்
காரணமற்ற காலம் தாழ்த்தி
கணக்கு பார்க்கிறான் போல...!!
சின்ன சந்தேகம்...??
எமன் என்ன தர்மம் செய்து
எம தர்மன் என பெயர் பெற்றான்..?
கொல்வதில் தர்மம் பார்த்தே
கெட்டிக்காரன் ஆகி விட்டான் போல..!!