கருணை வேண்டும்

கல்லில் கூட
கருணை பார்க்கும் மனிதா
உன்னில் ஏனோ அதனை
மறந்துவிட்டாய் ......

இருக்க வேண்டிய
இரக்கத்தை இழந்துவிட்டு
எதை எதையோ உன்மனதில்
ஆழ பதிந்து வைத்திருக்கிறாய் .........

சகமனிதனோடு சகவாசம்
செய்யாத நீ
சுகவாசத்திருக்கு ஆசைப்பட்டு
சுயநலவாதியாய் ........

பரிவு காட்டவேண்டிய உறவுகளிடத்தில்
பழிதீர்த்து வாழ்வதேனோ
நேசிக்க மறந்தவனே
நினைவில் வை ...........

கோவில் கோவிலாய் சுற்றி
கைகூப்பி கடவுளிடம் கேட்டாயே கருணையை
என்றாவது மனிதனிடம்
காட்டி இருப்பாயா .........

அவன் கொடியவன் இவன் கொடியவனென்று
உறவுகளை ஒதுக்கிவைத்து
நீ என்றாவது நியாயமாய்
வாழ்ந்து இருக்கிறாயா ........

அடுத்தவரை குறை சொல்லி
காலம் தள்ளும் மனிதா நீ
உன் தவறுகளை உணர்ந்து பார்த்த
நேரம் உண்டோ .........

நீ என்ன செய்தாயோ
அதுதான் உன்னை தேடும்
கருணையை வேண்டுபவனே
நீ எத்தனை பேருக்கு கருணை காட்டி இருக்கிறாய் ..

மனிதனாய் பிறந்து மண்ணாய் கரைபவனே
கருணை என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உணரு
அன்றே நீயும் கடவுள்தான் ..........

அன்று உன்னை வெறுத்தவரும்
உன்னை நேசிப்பார்
உனக்கு வேண்டாதவர்
இருக்கமாட்டார் ..........

கருணை உணர்ந்துவிட்டால்
நீ கடவுளுக்கு சமமானவன்
உலகத்தை உன்னால்
உணர முடியும் ........

அடுத்தவரின் அவமானகளில் இல்லை
உனது வெற்றி
அவனது சிரிப்பினில்தான்
இருக்கிறது உனது வெற்றி ........

வெளிப்படைக்கு வாழ்வது இல்லை வாழ்க்கை
வெளிப்படையாக வாழ்ந்து பார்
உள்ளம் சுத்தமாகும்
உலகம் சொர்க்கமாகும் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (14-May-14, 10:34 am)
Tanglish : karunai vENtum
பார்வை : 152

மேலே