மீண்டும் வருகிறேன்

அகண்ட இருளில்
எங்கோ விரியும் விளக்கு வெளிச்சத்தில்
என்றோ விட்டு வந்த பழைய பாதை
கற்கள் பரப்பி கால் ரத்தம் பிழிய காத்திருக்கி றது ...

கண்கள் பனிக்க பனிக்க
இமையில் கண் மூடி பிழிந்து பிழிந்து
கண்மணியை பார்த்து கை அசைத்து அசைத்து
கண்காண தேசம் வந்தேன் பறந்து பறந்து ...

மீண்டும் வருகிறேன்
தோற்ற இடமெல்லாம் தொழில் பரப்ப
சூட்சுமம் அறிந்து சூத்திரம் கடைந்து
சூதாட போகிறேன் ,சுயநலத்துடன் ....

குரு பார்த்து கை வைத்தேன் மணிக்கு நன்றி
வாலீத் பின் தல்லால் பார்த்து வானம் -- -------------------------------------------------------------- தொடபோகிறேன்
வாழ்க்கைக்கு நன்றி

சிற்றுந்து திரும்ப இயலா ஊரில் பிறந்தவன்
திரும்பி வருகிறேன் இந்தியாவிற்கு
இறைவா உனக்கு நன்றி

எழுதியவர் : nagaxcd (14-May-14, 2:55 am)
Tanglish : meendum varukiraen
பார்வை : 155

மேலே