Mohanambal - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mohanambal |
இடம் | : |
பிறந்த தேதி | : 16-Feb-1970 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 14 |
வார்த்தை பிரசவத்தில் வந்து விழுந்த பிஞ்சுக்குழந்தைதான் என் கவிதைகள்
நீ என்னை ஏற்று கொண்டபிறகு
எமனே வந்து என்னை அழைத்தாலும்
நான் சென்றுவிடுவேன் .....
ஏன் என்றால்.....
அப்பாவிக்கு தெரியாது
இந்த ஏவாலின் உயிர்
அந்த ஆதாமின் இதயத்தில்
இருக்கிறது என்று...!
உன் பாதசுவடுகள் பதிந்த இடங்களில்
என் விழிகளின் ஆக்கிரமிப்பு....
உன் பக்கம் இருந்த நாட்களில்
என் நினைவுகளின் பரிதவிப்பு...
என் சோகங்களின் தடுமாற்றங்களில்
உன் முகத்திரையின் ஆர்ப்பரிப்பு...
இனி எப்போது நம் இருவரின் சந்திப்பு?
நீ கிடைப்பதற்கு யுத்தம் ஏதும் செய்யவில்லை
இருந்தாலும் போர்க்கள அம்புகள் என் மார்பில்....
உனக்காக தவம் ஏதும் செய்யவில்லை
இருந்தாலும் சாபங்களின் சாயல் என் தோளில்...
உன்னோடு வாழ்வதற்கு வழியேதும் இல்லை
இருந்தாலும் வலிகளின் ஓதம் என் நெஞ்சில்....
உன் பின்னோடு வருவதற்கு தடையேதும் இல்லை
இருந்தாலும் மண்ணோடு மடிவதற்கே விரும்பும் என்விழிகள்.....
ஏன் எனில்...
நான் இறந்தபின்பவது...
இறக்கம்
கொள்ளுமா உன்மனது?
இறங்கி கொல்லுமா
உன் நினைவு?
அவள் கூந்தல்
விட்டிறங்கிய மல்லிகை தோட்டம்
உதிர்ந்தாலும்
உயிர் தருமே எனக்கு....
வழிப்பறி செய்தாயே..
இது தகுமோ
உனக்கு?
என்று என்மீது
கோபம் கொண்டன
குப்பைத்தொட்டிகள் ...!
உனக்கு என் நினைவு சாதாரணம்....
என்னுள் உன் நினைவோ -சதா ரணம்...