Jeevalatha - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Jeevalatha
இடம்:  Rajapalayam
பிறந்த தேதி :  17-Jul-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Dec-2013
பார்த்தவர்கள்:  195
புள்ளி:  68

என்னைப் பற்றி...

:)

என் படைப்புகள்
Jeevalatha செய்திகள்
அளித்த கேள்வியை (public) அன்புமலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Aug-2014 12:16 pm

ஒரு படைப்பை தலத்தில் ஒரு முறை தான் பகிர முடிகிறது ,இதனால் பல படைப்புகள் காணாமல் போகிறது


இதை பகிர்வை unlimited எண்ணிக்கை கொண்டு வரவேண்டும்

உங்கள் கருத்தென்ன நண்பர்களே

மேலும்

தங்கள் வருகைக்கும் பதிலுக்கும் நன்றி தோழரே , உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் 01-Sep-2014 9:40 pm
நல்ல யோசனை, மாற்றம் பலன் அளிக்கும். உடல் நலக் குறைவால் உடன் பதில் தர இயலவில்லை, வருந்துகிறேன் 31-Aug-2014 10:57 am
நன்றி தோழரே., தளதாருகும் இதைப் பற்றி மின்னஞ்சல் அனுப்புங்கள் , நன்றி 25-Aug-2014 12:19 pm
நன்றி தோழரே 25-Aug-2014 12:17 pm
அஹமது அலி அளித்த படைப்பில் (public) குமரிப்பையன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 7:43 am

மாச்சரியங்கள் மூழ்கடிக்க
---ஆச்சர்யங்கள் முளைக்கிறது
தாத்பரியங்கள் அறியாமலேயே
----சாத்வீகம் சாணக்கியமாகிறது!


நட்பேந்திய நெஞ்சுக்குள்
---நெருஞ்சியொன்று தைக்குது
தையலின் தயவுகளில்
---மையலாகிறது மனது!


மகராலயப் பேரலைகள்
---மதர்த்த நினைவிலடிக்குது
மதுரத் தேனோடைகள்
---எதார்த்தமாய் பாய்கிறது!


வங்கண வசியங்களில்
---பிரம்மச்சரியம் வழுவுகிறது
இங்ஙனம் வாழுங்கால்
---வாமனமும் வான்தொடுது!


பங்கயம் இதழ்மலர்ந்து
---பாயிரம் படிக்குது
பந்தமும் கொண்டாடிட
---பரிசமிட துடிக்குது!


எங்ஙனம் மறைத்தாலும்
---எனதாசை வெடிக்குது
வசந்த அழைப்புகளில்
---என்மனம் சிரிக்குது!

மேலும்

மந்திர மொழயில் ஓர் வசந்த அழைப்பு .. சுந்தரக் கவிதை ! 21-Aug-2015 10:27 am
சூப்பர் ஜி 03-Jul-2015 11:47 pm
பாதிக்கு மேல புரியலை.. அனாலும் ரொம்ப நல்ல இருக்கு! :) 04-Dec-2014 10:03 am
மிக்க நன்றி தோழி 15-Nov-2014 9:27 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2014 9:55 am

மக்கா மாநகரில்
எத்தனை
ரோஜாக்கள் பூத்தாலும்...

முஹம்மத் என்னும்
ராஜ ரோஜாவுக்கு நிகராக
ஒரு மலரும் இதுவரை
பூத்ததில்லை...!

முஹம்மத் என்னும் பெயரை
ஒருமுறை உச்சரித்தால் போதும்
ஆன்மாவோ நறுமணக் கடலில்
மூழ்க ஆரம்பித்து விடும்...!

அண்ணல் நபியின்
பொற்பாதங்களோ
பூமிக்கு ஒத்தடம்...!

சீறாவே...
சூராவே...
உமது உமிழ் நீர்
நரக நெருப்பின்
தாகம் தீர்க்கும் அரும்பானம்...!

பொன்னாடை போர்த்திய
பெருமானே...
வாழ்வில் ஒரு பொழுதும்
பொன்னாடைகளை அணிந்ததில்லையே..!

பாலைவனத்து அனலுக்கு
வெப்பம் தணிக்க வந்த
அண்ணல் நீங்கள்...!

சுவர்க்கம்
உமை அழைத்தது
அதன் சுவர்க்கத்தைக் காண...!
அதுதான்

மேலும்

பார்வைக்கு நன்றி 31-Jul-2014 9:07 pm
நன்று 31-Jul-2014 10:58 am
வருகை தந்து வாசித்து கருத்தளித்தமைக்கு நன்றி 24-Jul-2014 9:47 pm
மிகவும் நன்றாக இருந்தது நண்பரே.. 24-Jul-2014 8:44 pm
Jeevalatha - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2014 3:11 pm

வளைந்து நெளிந்து தன்னலம் தேடும் மனிதா!
உன் மரணம் மறந்து வாழ்வதும் ஏனோ ???

ஒற்றை ரூபாய்தான் உழைப்பின் ஊதியம்
ஒன்பது ரூபாயின் பெருமையும் எதற்கோ ???

மாற்றார் பெருமைக்கு வாழ்வதை மறந்து!
மகிழ்வுடன் உனக்கென வாழ்தல் குறையோ???

உண்டதில் மீதி இல்லாதோர் தந்தால்!
உடமையில் குறைவு எங்குதான் உண்டோ ???

வெட்டியபோது சிந்திய இரத்தம்!
உன் மரணத்தின் போது போற்றியா தூக்கும் ???

ஆண்டவர் எனினும் மாண்டவர் ஆவார்!
பதுக்கிய செல்வம் கொடுத்த மகிழ்ச்சிதான் ஏதோ???

வளைந்து நெளிந்து தன்னலம் தேடும் மனிதா!
உன் மரணம் மறந்து வாழ்வதும் ஏனோ ???

என்றும் அன்புடன் -ஸ்ரீ-

மேலும்

ஹிஹிஹி நன்றி தோழமையே :) 30-Sep-2014 1:33 pm
அருமை நட்பே.....! 30-Sep-2014 12:58 pm
நன்றி தோழமையே :) 28-Sep-2014 9:42 am
ஆண்டவர் எனினும் மாண்டவர் ஆவார்! பதுக்கிய செல்வம் கொடுத்த மகிழ்ச்சிதான் ஏதோ??? -அருமையான வரி ! 27-Sep-2014 9:26 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 3:11 pm

வளைந்து நெளிந்து தன்னலம் தேடும் மனிதா!
உன் மரணம் மறந்து வாழ்வதும் ஏனோ ???

ஒற்றை ரூபாய்தான் உழைப்பின் ஊதியம்
ஒன்பது ரூபாயின் பெருமையும் எதற்கோ ???

மாற்றார் பெருமைக்கு வாழ்வதை மறந்து!
மகிழ்வுடன் உனக்கென வாழ்தல் குறையோ???

உண்டதில் மீதி இல்லாதோர் தந்தால்!
உடமையில் குறைவு எங்குதான் உண்டோ ???

வெட்டியபோது சிந்திய இரத்தம்!
உன் மரணத்தின் போது போற்றியா தூக்கும் ???

ஆண்டவர் எனினும் மாண்டவர் ஆவார்!
பதுக்கிய செல்வம் கொடுத்த மகிழ்ச்சிதான் ஏதோ???

வளைந்து நெளிந்து தன்னலம் தேடும் மனிதா!
உன் மரணம் மறந்து வாழ்வதும் ஏனோ ???

என்றும் அன்புடன் -ஸ்ரீ-

மேலும்

ஹிஹிஹி நன்றி தோழமையே :) 30-Sep-2014 1:33 pm
அருமை நட்பே.....! 30-Sep-2014 12:58 pm
நன்றி தோழமையே :) 28-Sep-2014 9:42 am
ஆண்டவர் எனினும் மாண்டவர் ஆவார்! பதுக்கிய செல்வம் கொடுத்த மகிழ்ச்சிதான் ஏதோ??? -அருமையான வரி ! 27-Sep-2014 9:26 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-May-2014 4:53 pm

என்னைக்
கடந்து செல்லும்
உனது புன்னகை
காட்டிக்கொடுத்து விடுமோ
என் பார்வையின்
கள்ளத்தை

===================

கண்ணிய இடைவெளியில்
நம் உதடுகள்
பேசிக்கொண்டிருக்க
கண்களோ
கண்டபடி
தழுவிக்கொள்கின்றன

===================

நீ
முகம் கழுவிய நீரில்
தங்கம்
பிரித்தெடுக்க வேண்டும்

உனது
வியர்வையை
உறையவைத்து
வைரமாகிறதா
பார்க்க வேண்டும்

===================

எனது
சில்மிஷங்களை
மறுத்துக் கொண்டிருக்கும்
உனது உதடுகளை
மறுத்துக் கொண்டிருக்கின்றன
உனது கண்கள்

===================

ஆசை காட்டுகிறது
காற்று
மோசம் செய்கிறது
உன் துப்பட்டா

=============

மேலும்

ஆகா ! கவிதைக்கே ஒரு கவிதைபாடி அக்கவிதையை மேலும் சிறப்படையச் செய்து விட்டீர்கள் ஐயா ! மிக்க நன்றி 07-May-2014 6:30 pm
கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே 07-May-2014 6:29 pm
அருமை தோழமையே............. 06-May-2014 6:12 pm
காமமுற்றாய் முதலில் காதலை பழகி பழகி புரிந்துக்கொண்டாய் பெண்ணால் அவளை புரிந்ததன் காரணம் வருணித்த அவள் மேல் கவி நின் கவிதை வரிகள் அனைத்தும் இனிமை உன் காதலைப் போல் ... 06-May-2014 6:19 am
Jeevalatha - காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2014 7:40 am

கருத்திலே பூத்தது!!-காண்க சசி குமாரின் 160480-!!

பிறந்தது தெருவோடு;
வளர்ந்தது மழையோடு!
வாழ்வது வெயிலோடு!

பசி வயிற்றோடு!
பள்ளி கண்ணோடு!
தேடல் குப்பையோடு!
தேவை உயிரோடு!

உழைப்பு உடலோடு!
உயர்வோ கனவோடு!
வீடுகள் தெருவோடு!
வியர்வை மட்டுமே எம்மோடு!

குப்பையில்லா ஊரும்
கோயில் ஆகுமாம்!
குப்பையாய் நாங்கள்
கோபுரம் ஆவமோ?
== சென்று பாராட்டுங்கள் சசிகுமாரை====

மேலும்

சூப்பர்மேன்=மீமிகை மனிதன் என்று சொல்லலாமோ? 09-May-2014 10:00 pm
குப்பையும் ஒருநாள் கோபுரமாகும் சுப்பையன் ஒருநாள் சூப்பர்மென் ஆகுவான் (சரியான தமிழ் வார்த்தை தேவை) அந்நிலை இன்றோ நாளையோ தன்னிலை உணர்ந்து உழைத்திட்டால் ... 09-May-2014 9:43 pm
Jeevalatha - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2014 7:21 pm

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா ..

கடவுள் இழைத்த பெரிய தவறு
உடலைக் கொடுத்து உயிரைப் புகுத்தி
கடமை முடித்த கடைசி நொடியில்
மடியில் பசியைக் கொடுத்து இதயம்
துடித்திட வைத்தது தான்

மேலும்

உடல் - உயிர் - மடி - பசி - இதயம் - துடி! அடி சக்கை! 21-May-2014 1:43 pm
மிகவும் அருமை ஐயா... 06-May-2014 1:56 am
சூட்சுமம் பதித்தும் இறை இல்லை என்போன் இருக்கையிலே இரை தேடும் பசி கொடுக்காதிருந்தால் இயங்கிடாதே இதுவரை இப்பூமி !அருமை ! 05-May-2014 8:40 pm
அருமை அய்யா. 05-May-2014 8:18 pm
Jeevalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 1:24 pm

நீண்ட இடைவெளிக்கு பின்
நிகழும் சந்திப்பு...

பகிர்ந்துகொள்ள
பல நினைவுகள் இருந்தும்
மவுனம் என்ற நாகரிகப் போர்வையில்
நகர்ந்து கொண்டிருந்தது நேரம்...

பிரிகையில்
உன் குடும்பம் பற்றி நீயும்
உன் குடும்பம் பற்றி நானும்
உப்புச் சப்பில்லாமல் பேசி முடிக்கையில்,
தப்பித் தவறிக்கூட அந்த
பழைய பார்வையை பார்க்கவேயில்லை...

எல்லாவற்றையும்
மறந்தது போல்
யதார்த்தமாய் பேசும் நீ...

பழகிய நாட்களில்
எனக்கு எழுதிய
பெயரற்ற கடிதங்களை,
இனியும் நான்
பாதுகாத்து வைப்பதில்
பயனில்லை...

குப்பைக் கூடையில்
தான் போட வேண்டும்.

சரி,
நீங்காமல் நெஞ்சில் கிடக்கும்
பழைய நினைவுகளை

மேலும்

மிக்க நன்றி தோழரே 08-Jun-2014 12:36 pm
இதை வாசிக்கும்போதே என்னிடம் நேரில் பேசியது போன்ற ஒரு உணர்வு என்னுள் எழுந்தது தோழி....! மிக அருமை 31-May-2014 11:43 am
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழமையே 05-May-2014 7:59 pm
நினைவுகளை அகற்ற வேறு நல்ல நினைவுகளை நெஞ்சில் ஏற்ற வேண்டும். புதுக் கவிதைகள் புனைவதின் மூலமும் அவற்றை அகற்றி விடலாம். நல்ல படைப்பு ஜீவலதா அவர்களே 05-May-2014 10:03 am
Jeevalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2014 3:14 pm

அன்று ஜாதியின் பெயரால்
நம்மை பிரித்தார்கள்.

நல்லவேளை இன்று
நீ சம்மதித்தாயே!
உன் பேத்திக்கும்
என் பேரனுக்கும்
நடக்கவிருக்கும் திருமணத்தை...

மேலும்

மிக்க நன்றி 05-May-2014 8:00 pm
கால மாற்றம் தவிர்க்க முடியாதது. மாற்றங்களைச் சரியாகப் புரிந்து கொண்டால் நல்லதே நடக்கும். சிறப்பு. 05-May-2014 10:04 am
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி.. 03-May-2014 12:44 pm
கலப்பு சிறப்பு தோழமையே .. நிறைய எழுதுங்கள் தோழமையே வார்த்தைகள் உங்கள் வசப்படும் ... வாழ்த்துக்கள் ... 02-May-2014 3:25 pm
Jeevalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2014 4:21 pm

ஒரு ஊர்ல கிருஷ்ணா(கிருஷ்) என்ற ஒரு குட்டி பையன் இருந்தான். அவன் சரியான வாலு. ஒரு நாள் ரொம்ப அவசர அவசரமா அவன் வீட்டுக்குள்ள எதையோ தேடிடே இருந்தான்...ரொம்ப நேரம் ஆச்சு..
எதுமே கிடைகல.. உடனே பக்கத்து வீட்டுக்குள்ள போய் அங்கயும் எதையோ திருட்டு தனமா தேடிடே இருந்தான்..அங்கயும் எதும் கிடைகல...

உடனே ஒரு யோசனை வந்துச்சு கிருஷ்க்கு, ஒரு போன் பண்றாறு யாருக்கோ..

கிருஷ் : hello bro,balram.. எங்க இருக்க ?

பலராம் : hi கிருஷ், சொல்லு டா..என்ன ?

கிருஷ் : ரொம்ப முக்கியமான விஷயம் bro. நீ உடனே இங்க வா.

பலராம் : hey man, நா கிரிக்கெட் விளையாடிடு இருக்கேன் டா.. இன்னும் 2 ஓவர் தான்..முடிச்சுட்டு வ

மேலும்

பகிர்ந்துண்ணுதல் என்று வாசிக்கவும் 05-May-2014 9:00 pm
இம்ம்ம் 05-May-2014 8:00 pm
பகிந்துண்ணுதல் புரிகிறது. நன்று 05-May-2014 10:08 am
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள். 02-May-2014 12:26 pm
Jeevalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2014 12:58 pm

சற்று விலகியே இரு - ஏனெனில்
அது உன்னை மட்டுமே காயப்படுத்தும்...

உன்பக்கம் நியாயமிருந்தால்,
கோவப்படவேண்டிய அவசியமில்லை...

நீ தவறிழைத்திருந்தால்,
கோவப்பட உரிமையில்லை...

மேலும்

good 29-Apr-2014 12:59 pm
மேலும்...
கருத்துகள்

மேலே