தன்னலம் தேடும் மனிதா

வளைந்து நெளிந்து தன்னலம் தேடும் மனிதா!
உன் மரணம் மறந்து வாழ்வதும் ஏனோ ???
ஒற்றை ரூபாய்தான் உழைப்பின் ஊதியம்
ஒன்பது ரூபாயின் பெருமையும் எதற்கோ ???
மாற்றார் பெருமைக்கு வாழ்வதை மறந்து!
மகிழ்வுடன் உனக்கென வாழ்தல் குறையோ???
உண்டதில் மீதி இல்லாதோர் தந்தால்!
உடமையில் குறைவு எங்குதான் உண்டோ ???
வெட்டியபோது சிந்திய இரத்தம்!
உன் மரணத்தின் போது போற்றியா தூக்கும் ???
ஆண்டவர் எனினும் மாண்டவர் ஆவார்!
பதுக்கிய செல்வம் கொடுத்த மகிழ்ச்சிதான் ஏதோ???
வளைந்து நெளிந்து தன்னலம் தேடும் மனிதா!
உன் மரணம் மறந்து வாழ்வதும் ஏனோ ???
என்றும் அன்புடன் -ஸ்ரீ-