பணம்
பணம் பல பெயர்களில்......
காசு, துட்டு, சல்லி, பைசா ,
அதன் பெருமை செல்வமே .
பணம் இல்லை என்றால்
உலகம் மனிதனை
எப்படி அழைக்கும் ....... ,
பணத்தை சேமிக்க ,
ஓடி ஓடி உழைக்கிறோம்
ஓடாய் தேய்கின்றோம் .
ஆலாய் பறக்கின்றோம் .
அள்ளி அள்ளி சேர்க்கின்றோம் ,
பதுக்கியும் வைக்கின்றோம் .
ஏன் இப்படி/ நேர்மையாக
உழைத்துக் கொள் ,அளவுக்கு மீறி
ஆசை கொள்ளாதே..
பணம் என்றும் உன்னிடம் நிலைக்கும் ,
திருட்டும் இல்லை ,அச்சமும் இல்லை ,
தர்மம் வெல்லும் நீதி நிலைக்கும்,
உழைப்புக்கு மூலதனம் நல்ல தொழில் .
வாழ்க்கைக்கு மூலதனம் பணம் ,
தன்மானத்திற்கு மூலதனம் பண்பு .
இந்த உண்மையினை மனிதன்
உணர்ந்து வாழ்ந்திட முயன்றிடுவோம்
முயற்சி செய்திடுவோம் .
,