கலகம்

கலகம்!
கலங்கிய மனங்களின் கசக்கும் குணம்!
கலகம்!
நிம்மதி தொலைத்த நிர்மூலங்களின் கலியாட்டம்! கொடூரம்! குரூரம்!
கலகம்!
இயலாமையின் வெறியாட்டம்!
அறிவிழிகளின் ஆர்ப்பாட்டம்!அட்டூழியம்!
கலகம்!
பலவீனமான பலசாலிகளின்
பகல் வேஷம்! பாசாங்கு!
கலகம்!
வேலையில்லா வெட்டிகளின்
உருப்படாத உபத்திரவம்!
கலகம்!
காட்டுமிராண்டிகளின் கருங்காலித்தனம்!
கலகம்!
மனித குல கேவலம்!!!!!!