இது வெண்பா அல்ல, உன் பா

என்னைக்
கடந்து செல்லும்
உனது புன்னகை
காட்டிக்கொடுத்து விடுமோ
என் பார்வையின்
கள்ளத்தை

===================

கண்ணிய இடைவெளியில்
நம் உதடுகள்
பேசிக்கொண்டிருக்க
கண்களோ
கண்டபடி
தழுவிக்கொள்கின்றன

===================

நீ
முகம் கழுவிய நீரில்
தங்கம்
பிரித்தெடுக்க வேண்டும்

உனது
வியர்வையை
உறையவைத்து
வைரமாகிறதா
பார்க்க வேண்டும்

===================

எனது
சில்மிஷங்களை
மறுத்துக் கொண்டிருக்கும்
உனது உதடுகளை
மறுத்துக் கொண்டிருக்கின்றன
உனது கண்கள்

===================

ஆசை காட்டுகிறது
காற்று
மோசம் செய்கிறது
உன் துப்பட்டா

===================

நீ
ஐஸ்க்ரீம் தின்றாய்
கன்னியே
பார்த்து
எனக்கு வந்தது
ஜன்னியே

===================

நடை,
நீ நடந்தால்
நடனம்

===================

கலைந்த
உன் அதிகாலைப்படுக்கையை
நவீன ஓவியக்காரர்கள்
பார்த்துவிடப் போகிறார்கள்

===================

பொதுவிடத்தில்
நீ
சோம்பல் முறித்தால்
வெப்பச்சலனம்
காரணமாக
புயல் உருவாகலாம்

===================

நீ
குளித்துக் கரையேறிய
குளத்தில்
சுனாமி வரலாம்

===================

பழகப் பழக
உன் மீது
ஏற்பட்ட காதலில்
உணர்ந்தேன்
உன் மீது
முதலில் ஏற்பட்டது
காதலல்ல என்பதை

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (5-May-14, 4:53 pm)
பார்வை : 180

மேலே