நவீன கிருஷ்ணர்

ஒரு ஊர்ல கிருஷ்ணா(கிருஷ்) என்ற ஒரு குட்டி பையன் இருந்தான். அவன் சரியான வாலு. ஒரு நாள் ரொம்ப அவசர அவசரமா அவன் வீட்டுக்குள்ள எதையோ தேடிடே இருந்தான்...ரொம்ப நேரம் ஆச்சு..
எதுமே கிடைகல.. உடனே பக்கத்து வீட்டுக்குள்ள போய் அங்கயும் எதையோ திருட்டு தனமா தேடிடே இருந்தான்..அங்கயும் எதும் கிடைகல...

உடனே ஒரு யோசனை வந்துச்சு கிருஷ்க்கு, ஒரு போன் பண்றாறு யாருக்கோ..

கிருஷ் : hello bro,balram.. எங்க இருக்க ?

பலராம் : hi கிருஷ், சொல்லு டா..என்ன ?

கிருஷ் : ரொம்ப முக்கியமான விஷயம் bro. நீ உடனே இங்க வா.

பலராம் : hey man, நா கிரிக்கெட் விளையாடிடு இருக்கேன் டா.. இன்னும் 2 ஓவர் தான்..முடிச்சுட்டு வரேன்.

கிருஷ் : bro, i'm saying its very very important..i'm hungry.. நீ வர்ரியா இல்லையா ?

பலராம் : cool down..cool down..i'm on the way bro...bye.

(பலராம்,கிருஷ் இருக்குர இடத்துக்கு வந்து சேந்துட்டார்.)

கிருஷ் : bro, வீட்டுல இருக்குற வெண்ணை எல்லாத்தையும் அம்மாவும் , பக்கத்து வீட்டு பத்மினி அத்தையும் எங்கயோ ஒளிச்சு வச்சுருகாங்க டா.. I don't know where it is..you have to help me..please bro...i'm hungry..

பலராம் : sure bro..நான் என்னோட friend'கு போன் பண்றேன்.அவனையும் ஹெல்ப்'கு கூபிடலாம்.

(பலராம் யாருக்கோ போன் பண்றாறு)

பலராம் : hello Pete(Peter Parker - Spider man), how are you?

Pete : Hi dude..long time...no see...

பலராம் : buddy its emergency da...my bro need your help...எங்க வீட்டுல வெண்ணைய எங்கயோ ஒளிச்சு வச்சுருகாங்க..நீயும் வந்தா 3 பேரா சேந்து சீக்கிரம் கண்டுபிடிக்கலாம்.. what do you say?

Pete : sure dude..i'm on the way..

(Pete அவரோட spider man டிரஸ் போட்டு ரெடி ஆகி,சூப்பர் வேகத்துல கிருஷ் இருக்குர இடத்துக்கு வந்து சேந்துட்டார்.)

Pete : hi Krish, don't worry..we will search it together..

கிருஷ் : sure Pete. this way.

யாருக்கும் தெரியாம 2 வீட்டுலயும் கஷ்ட பட்டு 3 பேரும் தேடுறாங்க..Pete அவர்ட இருக்குற கம்ம வச்சு வீ ட்டு பரண் மேல, குடோன்குள்ள, பீரோ மேல எல்லாம் தேடுறார்..கடைசியா fridge குள்ள இருந்த ஒரு பெரிய டப்பாவ கண்டுபிடிசுட்டாங்க. சந்தோஷமா வீட்ட விட்டு வெளிய உள்ள பார்க்'ல உட்காந்து 3 பேரும் ரொம்ப ஆர்வமா டப்பாவ தெரந்து பாத்தா.........?

வெண்ணை ரொம்ப கொஞ்சமா தான் இருந்தது..உடனே,

பலராம் : கிருஷ்,Pete அத சாப்டுங்க..i'm not hungry..

Pete : hey no buddy..I had San Veg..Krish is hungry..Let him have..

கிருஷ் : No bro..நாம எல்லாரும் சேந்து சாப்டலாம்..ஆளுக்கு ஒரு ஸ்பூன்..வாங்க.

எல்லாரும் சாப்டுட்டு சந்தோஷமா விளையாட போய்டாங்க....

அருள்மொழிவர்மன்(என் 4 வயது மகனிடம்) moral of the story என்னடா கண்ணா ?

அருள் : நான் இனிமே dairy milk சாப்டும் போது நரேந்தர்கும் (அவனுடைய நண்பன்) குடுத்து சாப்டுறேன் ம்மா...

ஹ்ம்ம்..குட் பாய்..இப்போ தூங்கு..நேரம் ஆச்சு..

எழுதியவர் : Jeevalatha (25-Apr-14, 4:21 pm)
பார்வை : 281

மேலே