விதியின் விளையாட்டு25

ஷிவானிக்கு தேவையான நகைகளும் ஏனைய பொருட்களும் வாங்கிக்கொண்டனர்.

இன்னிக்கே அனைத்து பொருட்களையும் வாங்கி விடுவதென்று ஒரு முடிவுடன் வீட்டிலிருந்து கிளம்பினர்......!

75%வேலைகள் முடிந்து விட்டது நேரமும் போய்க்கொண்டிருந்தது என்ன பண்ணலாம் என்று யோசித்தனர்.

அலைந்து அலைந்து ஆண்களுக்கு களைத்து விட்டது இனி நாளைக்கு பார்த்துக்கலாம் என்று சொல்ல????? வேண்டாம் இன்னிக்கே முடிச்சிட்டு போயிரலாம் என்று பெண்கள் சொல்ல சரி என்று சொல்லிவிட்டு மறுபடியும் அடுத்த கடையை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.....!

ஒரு வழியாக அனைத்தையும் அன்றிரவே முடித்து விட்டு வீடு திரும்பினர்.....!

ஷிவானிக்கு தன்னுடைய பொருள் தேடலும் தேர்வும் பிடித்ததை விட மனோஜுடன் இருந்த நேரம் பிடித்திருந்தது அவனுக்கு தேவையானதெல்லாம், பிடித்ததெல்லாம் என்னவென்று கேட்டு தெரிந்து கொண்டாள்.....!

அன்றைய பொழுது இனிதாய் அமைந்தது இரு வீட்டாருக்கும்!!!!!!!

நாட்கள் சரசரவென்று நகர்ந்து கொண்டிருந்து திருமண ஏற்பாடுகளும் முடியும் தருவாயில் இருந்தது............

மனோஜும் ஷிவானியும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு சகஜமாய் பழகிக்கொண்டனர்.

ரிஷானியும் தான் அத்தான் என்றால் தனி மரியாதை சிறு குழந்தை போலும் தன்னை பற்றியும் தன் எண்ணங்களை பற்றியும் வெளிப்படையாகவே பேசுவாள் தன் காதலைத்தவிர அனைத்தையும் மனோஜிடம் ரிஷானியும் பகிர்ந்து கொண்டாள்.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் வேலை சுமையையும் ஒரு சுகமாக ஏற்றுக்கொண்டு பெற்றோரும் உறவினர்களும் செய்து கொண்டிருந்தனர்.

ஷிவானியின் வீடே கல்யாண களை கட்டி உறவினர்கள் நிரம்பி கோலாகலமாக இருந்தது.

சொந்தங்கள் அனைத்தும் சந்தோஷமாக இருக்க ஒரு குடும்பம் மட்டும் சோர்வாக இருந்தது அதுதான் ஷிவானியின் அத்தை குடும்பம்(அத்தை,மாமா,அத்தை மகன்,மகள்)......!




விதி தொடரும்.....

எழுதியவர் : ப்ரியா (25-Apr-14, 3:46 pm)
பார்வை : 246

மேலே