இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் - நாகூர் கவி

மக்கா மாநகரில்
எத்தனை
ரோஜாக்கள் பூத்தாலும்...

முஹம்மத் என்னும்
ராஜ ரோஜாவுக்கு நிகராக
ஒரு மலரும் இதுவரை
பூத்ததில்லை...!

முஹம்மத் என்னும் பெயரை
ஒருமுறை உச்சரித்தால் போதும்
ஆன்மாவோ நறுமணக் கடலில்
மூழ்க ஆரம்பித்து விடும்...!

அண்ணல் நபியின்
பொற்பாதங்களோ
பூமிக்கு ஒத்தடம்...!

சீறாவே...
சூராவே...
உமது உமிழ் நீர்
நரக நெருப்பின்
தாகம் தீர்க்கும் அரும்பானம்...!

பொன்னாடை போர்த்திய
பெருமானே...
வாழ்வில் ஒரு பொழுதும்
பொன்னாடைகளை அணிந்ததில்லையே..!

பாலைவனத்து அனலுக்கு
வெப்பம் தணிக்க வந்த
அண்ணல் நீங்கள்...!

சுவர்க்கம்
உமை அழைத்தது
அதன் சுவர்க்கத்தைக் காண...!
அதுதான்
மிஹ்ராஜ் பயணமோ...?

உம்மை அரவணைத்த
மதினா மாநகரம்
அருள்வளத்தை
நிரந்தரமாய் பெற்றனவே...!

நீங்கள் துதித்த
ஒரு சீர் வெண்பா
அல்லாஹ்...!

ரப்பியை காட்டிய
அரபியே...
முஜம்மில் சொன்ன
உம்மியே...!

அண்ணலின்
விரலானை கண்டால்
உத்தம தோழர்கள்
தன் தலைதனையும் தருவார்களே...!

மூட நம்பிக்கைகளை
வேரோடு வெட்ட வந்த
கோடரி நீங்கள்...!


குறிப்பு :-

முஹம்மத் நபி - இறைவனின் இறுதித் தூதர்

மக்கா - முஹம்மது நபி பிறந்த ஊர்

சூரா - இறை வசனம்

மிஹ்ராஜ் - சுவர்க்க பயணம்

அல்லாஹ் - இறைவன்

ரப்பி - இறைவன்

அரபி - அரபியை தாய்மொழியாய் கொண்டவர்

முஜம்மில் - போர்வையை போர்த்தியவர்

உம்மி - எழுத படிக்கத் தெரியாதவர்.

எழுதியவர் : நாகூர் கவி (6-Jul-14, 9:55 am)
பார்வை : 2250

மேலே