விஜயலக்ஷ்மி சுஷில்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : விஜயலக்ஷ்மி சுஷில்குமார் |
இடம் | : |
பிறந்த தேதி | : 23-Jul-1975 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 177 |
புள்ளி | : 34 |
ஜெய் பீம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். இது படம் அல்ல!
நமக்கு பாடம்...
ஜெய் பீம் நிகழ்வு 1993ல் நடந்தது. அச்சம்பவம் இருளர் மக்களுக்கு மட்டுமாவது அல்ல. நீதியரசர் சந்துரு அவர்கள் வக்கீலாக வழக்காடி நீதி கிடைக்க வழிவகுத்தார்.
இப்படத்தின் வெற்றி இதில் இருந்து நாம் கற்கும் பாடமே!
இது வெறும் ஒரு நிகழ்வு அல்ல....
இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடக்கும் அடக்குமுறை நிற்கவில்லை.
சாதி, மதம், அதிகாரம் மற்றும் பணம் என்ற ஆயுதங்கள் இருப்பவர்கள், இதெல்லாம் இல்லாதவர்கள் மீது நடத்தும் வன்மம் தொடர்கிறது. இதுபோன்ற நிகழ்வு நமக்கு நடக்காது என்று நம்பிக்கொண்டு இருக்கும் சாமான
புதிய வார்ப்புகள்
“ஐயோ..அம்மா” என்ற சுபாஷ் மாஸ்டரின் அலறலைக் கேட்டு நான் பக்கத்து வகுப்பறைக்கு ஓடினேன்.
அங்கு நான் கண்டக் காட்சி என்னைக் குலைநடுங்கச் செய்தது. காது கிழிந்து, வாய்ப் பிளந்து எக்குத்தப்பாக மேஜை நாற்காலிக்கு இடையில் சிக்கியிருக்கும் சுபாஷ் மாஸ்டரைச் சில மாணவர்களும் ராஜன் மாஸ்டரும் தூக்க முயன்றனர்.
இரண்டு நாட்களுக்குப் பின் ஆசிரியர்கள் அறையில், “என்ன ரேகா டீச்சர் இன்னிக்கி காலைல நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தீங்களே சார் எப்படிஇருக்காரு? ஏதாவது முன்னேற்றம் இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் சாரா மிஸ்.
“உயிருக்கு ஆபத்து இல்லை, ஆனா முதுகுத்தண்டுல அடி பட்டதால இ
காதல் வந்ததே... காதல் வந்ததே!
வருடம் 2015
“ச்சே ... இத்தனை நடந்தும் சகிச்சுக்கிட்டு போகணும்ன்னு இருக்கறது என்னோட தலையெழுத்தா?” அன்னிக்கி எடுத்த முட்டாள் தனமான முடிவு கண்ணுக்கு தெரியாத தாம்புக்கயிறால் தூணோடு கட்டியிட்டு நகக்கண்ணில் சிறிது கீறிவிட்டதுபோல் ஒன்றும் செய்யமுடியாமல் ... உதிரம் சிந்த சிந்த சிறிது சிறிதாக மரணிக்கும் என்நிலை யாருக்கும் வரக்கூடாது..” என்று என் மனம் அனிச்சையாக ஓலமிட்டது.
அந்த ஓலத்தை கலைப்பதுபோல் “என்ன செத்தவன நினைச்சிகிட்டு இருக்கியா? இரு உனக்கு இருக்கு கச்சேரி! உன் நினைப்பே அவனுக்கு இருக்கக்கூடாதுன்னு தானே அவன போட்டு தள்ளினது.” என்று கூறிக்கொண்டு உள்ளே சென்றவன்.. ஊருக
வெளிநாட்டுப் பயணம்
போலிகளை நம்பாதீர்! .............. கண்ணீரில் மிதக்காதீர்!!
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் செல்பவர்கள் இல்லை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டூம். அரபு நாடுகளில் வீட்டுவேலை மற்றும் கட்டிட தொழிலாளர் போன்ற அடிமட்ட வேலைக்கு சென்றேனும் தங்கள் குடும்பத்தை காக்கவேண்டிய சமூக பொருளாதார சூழல் உள்ளதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
சமீபத்தில் வீட்டு வேலைக்கு என்று சென்ற கஸ்தூரி என்பவர் சவுதி அரேபியாவில் இருந்து வந்த நிலையை எல்லோரும் அறியலாம். இது ஒரு கஸ்தூரியை பற்றியது அல்ல.. நம் கவனத்திற்கு வராத பலாயிரம் ஆண்,
வரமே சாபமாகுமா?
இன்றைய காலகட்டத்தில் கார்டூன் டிவி மற்றும் ஐபோன் (Gadgets) போன்றவை எவ்வாறெல்லாம் குழந்தை வளர்ப்பில் தங்களின் தாக்கத்தை ஊடுருவுகிறது என்று அறிந்தும் அறியாத நிலையில் இருக்கிறோம். வரமாக கிடைத்த பல விஷயங்கள் சரியாக கையாளாததால் நமக்கே சாபமாக மாறிவிடுகிறது.
முதலில் நம் உடல்நிலையை கணக்கில் எடுத்தால் நம் கண்களை தான் பாதிக்கிறது, சிறுவயது முதலே அடுத்திருந்து பார்ப்பதற்கு ஏற்றவாறு நம் கண்கள் பழகி விடுகின்றன, இது நாளாவட்டத்தில் வெளியே சென்று விளையாடும் எண்ணமே இல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஆகையால் நம் கண்கள் தூரமிருப்பதை எளிதாக பார்க்கும் திறனை இழக்கிறது மட்டுமல்லாமல் தேவையான சூரிய ஒளியும் க
தொடர்கதை ஆங்கிலத்தில் என்ன?
"அசூயை" என்றால் என்ன?
அசூயை என்ற வார்தையையின் அர்த்தம் என்ன? அதை எங்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?
கௌரவப் பிச்சைக்காரர்கள்!!! - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் பரபரப்பை தனதாக்கிக்கொண்டு ஓடும் காலை நேரம். ஆண், பெண் என்ற பேதமோ, இரவு பகல் என்ற சிந்தனையோ இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களின் ஓட்டத்திற்குத் துணையாகச் சென்னை முதல் காஞ்சிபுரம் வரை செல்லும் ரயிலில் எப்பொழுதும் போல் நானும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறிவிட்டேன்.
தினமும் ஒரே ரயிலில்பயணிப்பதும் ஒரு சுகம், வீட்டிலும், வெளியிலும் வேலைச் செய்துவிட்டு அரக்கப்பறக்க ஓடிவந்து ஏறிவிட்டால் ஜன்னலில் இருந்து வந்து மோதும் காற்று மனதைக் குளிர்வித்து, சோர்வைப் போக்கி உற்சாக மனநிலைக்குக் கொண
யார் காரணம்? - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
“என்ன தம்பிகளா, ரெண்டு நாளா பாக்கறேன், இங்கயே சுத்திக்கிட்டும், தூங்கிகிட்டும் இருக்கீங்க?” என்று ஒரு பத்து பதினோரு வயது இருக்கும் சிறுவர்களைப் பார்த்துக் கேட்டான் செல்வா.
இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்து சேர்ந்த மூன்று நாளும் அந்த ரயிலடியையே சுற்றி சுற்றி வந்தார்கள். கையில் இருந்த சில்லறை பணமும் ஒரு நாள் உணவிற்கே சரியாகிவிட்டது. அச்சிறுவர்கள் பதில் சொல்லாமல் மௌனமாய் இருந்ததை கண்ட செல்வம்
“என்னப்பா யாரும் உங்ககூட வரலையா? சாப்பிட்டிங்களா?” என்று செல்வம் அக்கறையுடன் கேட்டதும் அவர்களுக்கு தங்கள் அம்மாவின் ஞாபகம் வந்தது.
நல்லதோர் வீணை(கள்)
அன்றும் அப்படித்தான், நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் கண்ட செய்தியில் மனம் அதிர்ந்து சொல்ல முடியா துயரத்தில் மனது அழுத்தியது,
“படுபாவிங்க நாசமா போக..பச்ச மண்ண கூட விட்டு வெக்காத காவாலி பயலுக பாடையில போக...”
என்ற ஒப்பாரி குரல்கள் வெவ்வேறு மக்களிடம் இருந்து வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு தாயாக என் மனம் பரிதவித்தது.
அதுவும் பெண் பிள்ளை தாய் தந்தையுடன் இருந்தாலும், இல்லை விடுதியில் இருந்தாலும் பாதுகாப்பு சிறிதும் இல்லாத நிலையில் என்ன செய்ய?
எங்க தப்பு நடந்துதுன்னு யோசிச்சா நீ, நான், நாம், நம் குடும்பம், நம் சமூகம், நம் கல்வி... இப்படி நீளமான சங்
கண்டுகொண்டேன் (சுய)நலத்தை!
“அப்பா நீங்களே இப்படி இருந்தா எப்படி? முதல்ல வாங்க, நீங்க தைரியமா இருந்தாதானே மத்ததெல்லாம் நல்லபடியா நடக்கும். வாங்கப்பா, வந்து சாப்பிடுங்க. ரெண்டுநாளா நீங்க பட்டினி கிடந்தால எல்லாம் சரியா போச்சா? வாங்க .. ம்ம்ம்..” என்று இழுத்துச்சென்ற மகனோடு செல்லும்போது ஒருமுறை திரும்பி மனைவியை பார்த்தேன், மனைவியின் நிலைகுத்திய பார்வை ஊசியாய் குத்தியது என்னை.
வார்த்தைகளை விட மிகவும் தாக்கிய பார்வை. இரண்டு நாட்களாக ஒவ்வொரு நிமிடமும் எனக்கு வலியை வெவ்வேறு வகைகளில் உணர்த்திய நிமிடங்கள்.
கை தன்னிச்சையாக வாயிற்கு எடுத்துச்சென்ற உணவு ருசிக்கவில்லை. மீண்டும்மீண்டும் நிலைக்குத