வரமே சாபமாகுமா

வரமே சாபமாகுமா?
இன்றைய காலகட்டத்தில் கார்டூன் டிவி மற்றும் ஐபோன் (Gadgets) போன்றவை எவ்வாறெல்லாம் குழந்தை வளர்ப்பில் தங்களின் தாக்கத்தை ஊடுருவுகிறது என்று அறிந்தும் அறியாத நிலையில் இருக்கிறோம். வரமாக கிடைத்த பல விஷயங்கள் சரியாக கையாளாததால் நமக்கே சாபமாக மாறிவிடுகிறது.
முதலில் நம் உடல்நிலையை கணக்கில் எடுத்தால் நம் கண்களை தான் பாதிக்கிறது, சிறுவயது முதலே அடுத்திருந்து பார்ப்பதற்கு ஏற்றவாறு நம் கண்கள் பழகி விடுகின்றன, இது நாளாவட்டத்தில் வெளியே சென்று விளையாடும் எண்ணமே இல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஆகையால் நம் கண்கள் தூரமிருப்பதை எளிதாக பார்க்கும் திறனை இழக்கிறது மட்டுமல்லாமல் தேவையான சூரிய ஒளியும் கிகைக்கபெருவதில்லை. இதன் பலன் சிறுவயது முதலே கண்ணாடி அணிந்துகொள்ளும் நிலைக்கு இட்டுச்செல்கிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக ஆசியர்கள் 80% - 9௦% வரையில் இளம்வயதிலேயே மையோபியா (கிட்டப்பார்வை) மற்றும் பார்வையிழப்பு வரை நேரிட இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு நம்ப வாழ்வியல் மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது.
இந்தியா எதிர்கொள்ளும் அடுத்த சவால் ஒபிசிட்டி மற்றும் டயாபெடிக் ஆகும். இவ்விரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவையே. ஒபிசிட்டி வந்ததால் அதை சார்ந்த மற்ற அசுகங்களை தானாகவே அழைத்து வந்துவிடும். ஒபிசிட்டிக்கு இளம் வயதிலேயே வித்திடபடுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எவ்வாறு என்று சற்று பார்த்தால் பல பெற்றோர்களும் விளம்பரத்தில் வரும் குழந்தையைப்போல் தங்கள் குழந்தையும் கொழுக்மொழுக்கென்று இருக்கவேண்டி அவசியமில்லா மெனெக்கெடுகின்றனர். கார்ட்டூன் அல்லது ரைம்ஸ் போட்டுவிட்டு உணவை அரைத்து திணித்து விடுகின்றனர். இதனால் குழந்தைக்கு உணவின் தன்மையும் (Texture) மற்றும் சுவையும் அறியாமலும், போதும் என்ற உணர்வு தோன்றாமலும் போகும். அதுமட்டுமல்லாமல் தானாகவே எடுத்து உண்ணும் திறனால் விளையும் மூளையின் செயலை தூண்டுவது போன்ற நல்ல விஷயங்கள் கிடைக்காமல் போகும். இக்குழந்தைகள் பின்னாளில் பள்ளிக்கு கொண்டு செல்லும் உணவினை உண்ணாமலும், எதிர்காலத்தில் ஒபிசிட்டி உள்ள நபராகவும் இருக்க மிக அதிக வாய்ப்பு உள்ளது.
மனதளவிலும் இவை பல மாற்றங்களை கொண்டுவருகிறது. குழந்தைக்கு ஒரு மாற்றமாக காட்ட வேண்டிய டிவி மற்றும் கார்ட்டூன் நாளாவட்டத்தில் குழந்தை அதற்கு அடிமையாகும் நிலைக்கு போய்விடுகிறது. இதன் அடுத்த கட்டம் சாப்பிட வேண்டும் என்றால் டிவி அல்லது கார்டூன் வேண்டும் என்ற “கண்டிஷன்” நிலை ஏற்படுகிறது.
இதேபோல் குழந்தைகளும் விளம்பரங்களில் பார்க்கும் பொருட்கள் மற்றும் உணவு வகைளை நோக்கி ஈற்கப்படுகின்றனர். அதையெல்லாம் வாங்கித்தந்து பழகிய பின்னர் அது நிறுத்தப்படும் பொழுது அடம் பிடித்து மீண்டும்மீண்டும் வாங்கும் நிலைக்கு பெற்றோரே காரணம். இதன் எதிரொலியாக நம் உணவு வகைகளை ஒரு பொருட்டாகவே கருதாத நிலையில் மேலும்மேலும் சிக்கலுக்கு இட்டுச்செல்கிறது.
என்ன பார்ப்பது என்ற வரைமுறை இல்லாமல் வீட்டில் பெரியவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளை குழந்தைகளும் பார்ப்பதால் பல தேவையிலாத விஷயங்களை கற்றுக்கொள்ளுகின்றனர். சிறுவயதிலேயே பெரியவர்களைப் போன்ற பேச்சும் செயலும், எங்கு இட்டுச்செல்லும் என்று கூறவேண்டியதில்லை.
இங்கு மற்றொரு விஷயத்தையும் கூறவேண்டியது அவசியம் என்று உணர்கிறேன். டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோ பற்றியதே அது. குழந்தைகளின் திறனை வளர்ப்பது பெற்றோரின் கடமையே, அதே சமயம் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்காமல் அறிந்தோ அறியாமலோ பெற்றோரே போட்டியும் பொறாமையும் ஊட்டும் நிகழ்வுகள் நடக்கின்றன. தோல்வி அடைந்தால் ஏதோ எதிர்காலமே இல்லாத மாயை உருவாக்கி விடுகின்றனர். ஆர்வமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாட்டும் நடனமும் (விஷுவல் மீடியா) ஊடகத்தின் வியாபார தந்திரத்தின் சூதாட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறது. இதை பற்றி கவலை படாமல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை டிவியில் காணவேண்டி அழுத்தம் தருவது வருந்தத்தக்கது.
இங்கு குறிப்பிட்ட பின்விளைவுகள் ஒரு சிறு பகுதியே, முழுமையாக அறியவேண்டுமானால் நாம் அன்றாடம் எதிர்க்கொள்ளும் பல செயல்களிலும் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை நினைவுக்கூரவும். ஆரம்பக்கட்டத்தில் பல விஷயங்களை அறிந்துக்கொள்ளவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இருந்த ஊடகங்கள் பின்னாளில் நம் உடல் மற்றும் மனநலத்தில் தேவையற்ற மாற்றங்களை கொண்டுவந்ததின் விளைவு இன்றய நம் குடும்ப மற்றும் சமூகத்தில் எதிரொலிக்கின்றன.

நன்றி
ராணி வாராந்திரி
(ராணியில் வெளிவந்த என்னுடைய கட்டுரை)

எழுதியவர் : விஜயலக்ஷ்மி சுஷில்குமார் (20-Feb-16, 2:21 pm)
பார்வை : 285

மேலே