இலட்சிய ஊற்று - உதயா

என் கனவிற்கு முழு
பலமில்ல இடமொன்றில்
நான் கருவாக
முளைத்திருந்தேன்

கொஞ்சம் வளர்ந்து
காணாமல் போன
மாதத்தின் அந்த மூன்று நாட்கள்
என் தாயின் தவத்திற்கு வரம் கொடுத்தன

தனக்கான கோட்டையை
தாண்டி சென்ற சிங்கங்கள்
இதுவரை உணரா உணர்வை
அச்சமென பெயர் சூட்டிக்கொண்டு

முகவரி அறியா தேசம்
முன்பின் போடா வேசம்
பெற்றெடுத்த பிள்ளையெனும் பாசம்
அதில் வேகமாய் வளர்ந்தது என் கனவு நேசம்

அவர்களின் இரவுப் பொழுதின்
முகப்பூச்சி சாயத்தில்
மறைந்தே கிடந்தன
பகல் பொழுதின் பெரும் இன்னல்கள்

எதையும் உணரா
என் மணல் மதியில்
கனவு கொஞ்சம் கானலாகி
பாசத்தில் பணமரத்தினை கண்டெடுத்தது

என்றும் போல் கிடைத்த
விடுமுறை தினமொன்றில்
என் தாய் தந்தையோடு பணியில்
ஒரு நாள் பொழுதை கழித்தேன்

அன்றைய சூரிய அஸ்தமனத்தில்
மெதுவாய் கசிய தொடங்கியது
என் மணல் மதியில்
பெருத்த இலட்சியம் ஊற்று

எழுதியவர் : உதயா (20-Oct-15, 3:08 pm)
பார்வை : 106

மேலே