புன்னகை

இதழ் பேசும் வார்த்தைல்லா மொழி
பல காயங்கள் போக்கும்
மகத்துவம் கொண்டது.....
மழலை புன்னகை
மனங்களை வெல்லும்.....
மங்கையின் புன்னகை
பொன் நகை தோற்கும்.....
ஆடவர் புன்னகை
யுத்தங்கள் தகர்க்கும்....
போக்கை தாத்தாவின் புன்னகை
புதையல்.....
இதழோடு விழி செய்யும் புன்னகை
இதயங்கள் பரிசாகும்.....
வார்த்தைகள் இன்றி வசீகரிக்க
புன்னகையே அழகிய திறவுகோல்...