என் ஜன்னல்

ஒற்றை ஐன்னல்,
கையில் தேநீர்,
வெளியே மழை.

பார்த்து ருசித்த ஜன்னல் எங்கே?

ஒற்றை ஜன்னல்,
வெளியே மகளிர்,
மங்கையர் அழகு.

பார்த்து ரசித்த ஜன்னல் எங்கே?

ஒற்றை ஜன்னல்,
சூரிய கதிர்,
பள்ளியின் விடுமுறை.

எனை எழுப்பிவிட்ட ஜன்னல் எங்கே?

ஒற்றை ஜன்னல்,
மழையின் முதல்துளி,
மண்ணின் வாசம்.

ரசித்து சுவாசித்த ஜன்னல் எங்கே?

ஒற்றை ஜன்னல்,
பரீச்சை நேரம்,
கதவுகள் அடைப்பு.

நான் சிறையாய் நினைத்த ஜன்னல்
எங்கே?

ஒற்னை ஜன்னல்,
வெளியே கொலை,
இரவில் சிணுங்கல்.

நான் பயந்து உறங்கிய ஜன்னல்
எங்கே?

ஒற்றை ஜன்னல்,
காதலி வருகை,
தூரத்து பார்வை.

நான் கூச்சம் கொண்ட ஜன்னல் எங்கே?

ஒற்றை ஜன்னல்,
எதிரே கடை,
கூக்குரலில் வாங்குதல்.

நான் சோம்பேறியாய் கிடந்த ஜன்னல் எங்கே?

ஒற்றை ஜன்னல்,
நடு ஜாமம்,
பேய்கள் வருமா!

திறந்து பார்த்த ஜன்னல் எங்கே?

ஒற்றை ஜன்னல்,
மனிதர் நடக்கும்,
அவசர வாழ்க்கை.

நான் கற்றுத் தெரிந்த ஜன்னல் எங்கே?

வெளியூர் போன அவசரத்தில்
வந்து பார்த்தேன்.
ஜன்னல் இருந்த இடத்தில் சுவர்!

எனக்கு எல்லாம்
உணர்த்திய ஜன்னலே
யாருக்கோ உணர்த்த சென்றாயோ!??

எழுதியவர் : (20-Oct-15, 12:39 pm)
Tanglish : en jannal
பார்வை : 145

மேலே