நம்ம ஊரு பூவாத்தா

நம்ம ஊரு பூவத்தா
வயலோர வரப்பினிலே
ஒய்யார நடைபயில
தாவணியை சொருகிகிட்டு வயலில் தான்
இறங்கையிலே
கைவளையல் குலுங்கிடவே
ஒய்யார நாற்று நட
ஜல்லிகாட்டுகாளையுமே
மனம் மயங்கி சொக்கிவிட
ஏர் உழும் உழவனுமே
தடுமாறி தடம் புரள
வடகாற்று தென்றலுமே
பூங்காற்றை வீசுதடா
பூவாத்தா நாற்றுநடும் ஒய்யாற அழகை கண்டு

எழுதியவர் : செல்வம் சௌம்யா (20-Oct-15, 11:43 am)
பார்வை : 564

மேலே