அனாதையின் அர்த்த ராத்திரிகள்,,,,

அனாதையின் அர்த்த ராத்திரிகள்,,,,

(இக்கதையில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் இடங்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது)
நாள்,,,11 - செப்டம்பர் 2012

எப்போவும் போல இன்னைக்கும்,,,,படுக்கையில் போய் விழுந்த கணம்,,
லேசான உறக்கத்தின் நடுவில் கனமான எதோ நினைக்காமல் விட்டிருந்த
நினைவு தூறல்கள்,,,,

உறக்கம் வர மறுத்தது,,,,போர்வையை விலக்கி எழுந்தவன்,,,நிசப்த
வேளையில் உறங்க மறந்திருக்கும் கடிகார முட்களின் சப்தம் கேட்டு
மணித்துளிகளை,,,நோக்கியபொழுது,,,,,மணி நள்ளிரவு 12:30

ஒரு சிகரட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்து பற்ற வைத்தவன்
தீக்குச்சி உரசிய பெட்டியின் காயம் போல்,,,,எதோ உள்ளூர யோசனைகள்,,,
வட்டமிடும் சிகரெட் புகையுடன் ,,,,என் ஜன்னல் விட்டத்தின் வழியாக தெரியும் இயற்கையின் ரகசியத்தோடு,,,லேசான மழை தூறல்,,,அதை ரசித்தவனாய்,,,என் எண்ணங்களோடு புதைந்து சென்ற அவளின் நினைவுகளோடு ,,,லைக்கியமானேன்,,,,,
நான் மேடை பாடகனாய் உலா வந்த கால கட்டங்கள்,,,

2003 ,,,,,,அக்டோபர் மாதம் 13 ஆம் நாள்,,,

அக்டோபர் மாத மழைக்காலம்,,,சாலையெங்கும்,,
நீரோட்டம்,,,,வழியெங்கும் வாகனங்களின் நெரிசல்,,,சமயம் மாலை 6:௦௦,,,,,ரொதானா ஹோட்டல் ஹய்,,,நெருங்குவதற்கு இன்னும் சில மணித்துளிகளே காத்திருந்த சமயம்,,,,என் கைப்பேசியின் அலறல் சத்தம்,,,

அவள்தான் ,,,,,தொடர் இணைப்பினை துண்டித்து விட்டு,,,,ஹோட்டல் ரொதானா,,,சென்று சேர்ந்தேன்,,,,மணி 7:௦௦ ய்,,,,,கடந்திருந்தது,,,,

நிகழ்ச்சியின் நிறைவில் ஆராவாரமான கூட்டங்களை,,,
கடந்து ஒரு வழியாக,,,என் காருக்குள் வந்தமர்ந்த பின் ,,,என் கைப்பேசியை எடுத்து,,,உயிர் கொடுத்தேன்,,,

முப்பதுக்கும் மேற்பட்ட அழைப்புகள்,,,,நான் ஹோட்டலுக்கு,,,
போயி சேரும் நேரம் வரையே அந்த அழைப்புகள்,,, ஒரே ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் இந்த அழைப்புகள் அனைத்தும்
நிகழ்ச்சியின் நடுவில்,,,ஒரு அழைப்பும்,,பதிவாகவில்லை,,,
தினமும்,,,இப்படி பல அழைப்புகள்,,,அவளை கண்டறிய முயன்றும்,,,தோல்விகள் தான் மிஞ்சியது என்னில்,,,,

யார் அவள் ஏன் இப்படி செய்கிறாள்,,எதற்காக என்னை தொடர்கிறாள்,,,ஒரு விடியா விடுகதையாக என்னுள் அவள் ,,,,வீற்றிருந்தாள்,,,,இந்த கேள்வி கணைகளை என்னுள்,,,எய்து கொண்டிருக்கும்,,,அவளின்,,,,மெல்லிய "ஹெலோ" என்கின்ற குரலை,,ஒரு முறை ஒரே முறை தான்,,நான் கேட்டிருக்கிறேன்,,

என் வீட்டு தொலைபேசியின் வாயிலாக,,,பின்பு எல்லாமே,,,தொடரழைப்பு துண்டிப்புகள் தான்,,,

13-நாள் - நவம்பர் 2004 ,,,,

அதே எண்,,,,,அதே நேரம் இது தொடர் அழைப்பு இல்லை,,,தொடர் அழைப்பு,,,,,,

இம்முனை,,,,நான்,,,,
ஹெலோ,,,,may I know who is this ????

மறுமுனை,,,,,
ஹெலோ ,,,,,, want to talk to you about my life in lalbaag , can I have your availability and appointment today if feasible ,,,,

இம்முனை,,,,,ok granted but how can I identify you there ,,,,

மறுமுனை,,,,,,kindly u come to front gate of lalbaag then u can identify me easily ,,,that who am i ,,,,

ஒரு மாத காலம்,,,நடந்தேறிய கண்ணாமூச்சி விளையாட்டுகளின்,,,
முடிவில்,,,,,அவள் முழுவதுமாய் என்னில் தென் பட்டாள்.,,, மாலினி

என்னை என் சுபாவத்தை பிடித்திராத ஒரு பெண்,,,,இருந்தும்,,,,என் எழுத்துக்களின்,,,என் கவிதைகளின்,,,என் பாடல்களின்,,ரசிகையவள்
என் ஒவ்வொரு அங்க அசைவுகளையும்,,,கண்காணித்தது,,,,என்னை
பிடிக்காத ஒரு பெண்ணா,,,???
ஹா ஹா ஹா ஹா ,,,,,ஆச்சர்யித்து போனேன்,,,,ஒரு கணம்,,,

அவள் அங்கு அளித்த விளக்கங்கள் எதுவும்,,,
என் காதில் விழாதவனாய்,,,,,,அன்று என் வீடு திரும்பினேன்,,,,

அவளின் காதலை மறுத்தவனாய்,,இல்லை,,,,அவள் அழகில்,,,,காதலில்,,,விழுந்தவனாய் ,,நான்,,

அவளின் தொடர் அழைப்புகள்,,,ஒவ்வொரு ராத்திரிகளிலும்,,,தொடர்ந்து கொண்டே இருந்தது,,,,என்னை காக்கவைத்ததில்,,,அவளிடம் இருந்த தவிப்புகளை விட,,,அவள் இன்னும்,,,தவித்தாள்,,,என்னால்,,அவளின் தவிப்புகளையும்,,,தாங்க இயலவில்லை,,,ஒருவார காலம்,,கழித்து,,,என் வாழ்க்கையை அவளிடம்,,ஒப்படைத்தேன்,,,,,

என்னவளே,,,,

"இன்று என் இதயத்தின் திறப்பு விழா" என் இதயத்தை களவாடி சென்றே களவாணி சிறுக்கியே,,,"உன்னிடமே கேட்டுவிடுகிறேன் நான்" உன் இதயத்தை,,,,எப்பொழுது அதை தரப்போகிறாய்,,,என்னில்,,,

அவள் அப்போழுதென்னில் உரைத்தாள்,,,,,

என் மரணத்தில் கூட உன்னை
மறப்பதென்பது ,,கடினமடா,,

காலன் என்னை நெருங்கினாலும்,,,
அந்த தருணம் உன்னை நான் அழைப்பேன்,,,

நானில்லாத இந்த பூமியில்,,நீ
ஒரு உயிரில்லா ஓவிய கூடு,,,

மாயை நிறைந்த காற்று மண்டலம்,,,
என் காதலில்லாத இந்த உன் உலகம்,,,

என வலிகள் உன்னை உண்பதற்கா,,,??? இல்லை
என் விரகம் உன்னை கொல்வதற்கா,,,???

14 - ஆம் நாள் - February - 2005 ,,,

பிறந்தநாள்,,,,,,யாருமே இல்லாத என் இந்த பிறந்த நாளை,,நான் அதுவரை கொண்டாடியதில்லை,,,,அவளுக்கென்றோர் ஆசை,,,,

என்னை மகிழ்விக்க,,,,ஆயிரம் முறை,,,அழைத்திருந்த அவளின்
சந்தோஷ உணர்ச்சி,,,அதைக்காண நான் காத்திருந்த நேரம்

எனக்காய் காத்திருந்தவளின்,,பாதம் வலித்ததோ என்னவோ,,தெரியவில்லை,,,,,

என் பிறந்தநாள் பரிசாக ,,,, அவள் அளித்த புது உடுப்பினை,,,அவள் பார்க்கவே நான் அணிந்து சென்றிருந்தேன்,,,,

வெள்ளை நிற சால்வார் நீல நிற ஜீன்,,,,,

Indra nagar second stage , CMH Road ,,,, coffee day restaurant ,,,,

எத்தனையோ முறை அவளை சிரிக்க வைத்து மகிழ்ந்திருக்கிறேன்,,,

வீட்டில் இருந்து சரியாய்,,,காலை 8 மணி 30 நிமிடங்களில்,,,என் பைக் கிக்கரை உதைத்தேன்,,,ஒரு மணி நேரம் நீண்ட இடைவெளியாய்,,,என் மனதில் தெரிந்திருந்தது,,,,ஒரு வழியாய்,,,அவளை அடைய முயற்சித்த அந்நேரம்,,,,,நான் சிக்னல் ய் கடந்து "U" வளைவில்,,,வருவதாக கை காண்பித்த தருணம்,,,,அவள் புரிந்து கொண்ட விதம்தான் என்னவோ,,,சாலையை குறுக்காக கடக்க முயற்சித்தாள்,,,

மறுகணம்,,,,எதிரே வந்த வண்டி அவளின்மேல் மோதி,,,
குருதி படர நிலத்தில் விழுந்து கிடந்தவளை,,எடுத்து மடியில் வைத்து,,ஆறுதல்,,கூற வாயிலாமல்,,,நோக்கியிருந்தேன் சற்று நேரம்,,,,,
அவளும்,,,நடுக்கத்தில் என்னிடம் கேட்டாள்,,,,"Will you save me "
நானும் உரைத்தேன்,,உறைந்து போன என் உதடுகளிலிருந்து,,,,ஒரு வார்த்தையை,,,அவளுக்காய்,,,"Yes I will save you ,,",,என்று,,,சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவளை,,அன்று இரவு மணி 10:30 ஆகியும்,,பார்க்க முடியவில்லை,,,

நான்,,,அவளின் பெற்றோர்,,,உற்றார் உறவினர்,,,என் தந்தை எல்லாரும் அங்கேயே,,,சுமார் அன்று இரவு பதினோரு மணியளவில்,,,அவசர சிகிச்சை பிரிவில்(ICU),,,அவளை,,,காண அனுமதித்தனர்,,,,,

நான் கண்டு ஏங்கிய அந்த நிலவெங்கே,,,
இப்போதவளின்,,நிலை எங்கே,,,,

பால் நிலா,,,மறு மாசு பட்ட,,,களங்கம்,,போல்,,,
அப்பொழுது இருந்த அவளின் அந்த முகம்,,,,
அது என்னில்,,,தென்படவில்லை,,,,

அன்று அவளிடம்,, நான் உணர்ந்தது,,,
அவளின்,,,ஒரு பிடி புன்னகையை,,
மட்டும்தான்,,

அது என்னில் உணர்த்தியது,,,, ஆம் அது அவளின் வாழ்வின்,,
கடைசி மணித்துளிகள் என்று,,,,,

கடைசி புன்னகை,,,,,,

அவளின் நினைவுதிரமாய் நீங்காமல்,,,
இன்னும் என் நெஞ்சில் நின்ற அந்த கடைசி புன்னகை,,,,,,

என் உயிரோடும்,,,,என் நரம்புகளோடும்,,,என் ரத்த நாளங்கள் தோறும் கேட்கிறேன்,,,அவளின் அந்த புன்னகையை,,,நான்,,,,,

நாள்,,,12 - செப்டம்பர் 2012

சிகரெட் அணைப்பின் நெருங்குதலில்,,,கை சட்டென்று சுட்டு,,,
மறுபடியும் சாதாரண நினைவிற்கு திரும்பியவன் ,,,,
முழுவதுமாய்,,உறக்கமிழந்தேன்,,,,, என் நரம்புகளின் ரத்த
ஓட்டங்களோடு கலந்துவிட்ட ,,,எண்ணற்ற சிந்தனைகள்,,,
எத்தனை புரண்டும் என்னில் உறக்கமில்லை,,,

"எனக்கு நெருங்கிய நண்பர்கள் யார் என்று எவரேனும் கேட்டால்,,,,நான் சட்டென்று சொல்வது,,என் மனதையும், என் மனசாட்சியையும் தான்,,என் நெருங்கிய எதிரிகளும்,,இவர்கள் இருவரே,,,,,என்றும் கூட சொல்லுவேன்,,,ஏன் என்றால் இவர்கள் இருவருக்கும் நேசிக்க மற்றும்,,நேசத்தை ஏற்றுகொள்ள,,,மட்டுமே தெரியும்,,,,,,இவர்களுக்குள்,,எத்தனை சந்தோஷங்களை வேண்டுமானாலும்,,நாம் புதைத்து விடலாம்,,,,ஆனால்,,,,வலி வேதனை,,,,இதை இவர்களால்,,,,ஒரு பொழுதும்,,,ஏற்றுகொள்ள இயலாது,,,,ஆகையால்தான்,,,நான் இவர்களை,,,என் மூளையின் வாயிலாக,,,ஆட்கொள்கிறேன்,,,,,என் இந்த,,சந்தோஷங்களோடு,,,என் வலிகளையும்,,,வேதனைகளையும்,,,நேசிக்க கற்று கொடுக்கிறேன்,,,,,"

"எனக்கு தெரியும் விதி மிகவும் வலியது என்று,,,,இருந்தும்,,என் விதியை நானே,,,,பரிணமிக்க,,,ஆசைகொள்கிரேன்,,,,இந்த பூமியில்,,,,,"

"கடவுள் ஒரு மனிதனை படைக்கின்ற தருணத்தில்,,,எல்லாமே கொடுத்து படித்திருந்தாலும்,,,,எதோ ஒரு விடுகதையை,,,அவன் வாழ்க்கையில் வைத்து,,,படைத்துவிடுகிறான்,,,அந்தவிடுகதைக்கு,,பதில்,,தேடுவதுதான்,,,பூமி பந்தில்,,,நடக்கும்,,மனிதர்களின்,,,,தேடுதல் விளையாட்டு எனபடுகிறது,,,,,,

",,,,எல்லாவிதத்திலும்,,மனிதனை அவன் சந்தோஷம்,,மிக்கவனாக படித்துவிட்டால்,,,,மனிதன் இறைவனை மறந்து விடுவான்,,,என்பதே உண்மை,,,,ஆகையால் தான்,,,எல்லை மீறிய சந்தோஷத்தில்,, மிதக்கும்,,மனிதர்களுக்கு,,,,,கடவுள்,,,எதோ ஒரு தீராத,,மறக்க,,,
இயலாத துன்பட்ட்தை அவன் வாழ்வில்,,நிகழ்த்தி,,,,,அவனை ,,,
ஒரு சாதாரண மனிதன்தான் என்பதை உணர்த்துகிறான்,,,,"

இதில் என் வாழ்க்கையும்,,ஒரு விதி விலக்கு இல்லை,,

எனக்கென்று யாருமே இல்லாத இந்த தருணங்கள்,,எனக்கு மிகப்பெரிய பலம்,,,என்று சொன்னாலும்,,சில நேரங்களில்,,,,இது என் பலவீனம் என்று கூட சொல்லுவேன்,,,தனிமை எத்தனை கொடுமையானது என்பதை நன்கு உணர்ந்தவன் நான்,,,,என் உடல் இயலா நேரங்களில்,,,ஆம்,,,,சிலநொடி துளிகள் ,,,என்னை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது இந்த யாருமற்ற என் தனிமை,,,,

விடிந்தது என் கொடுமை நிறைந்த ராத்திரி அன்றொரு வழியாய்,,,புறப்பட்டு அலுவலகம் சென்றுவிட்டேன்,,,,அதே தூறல்,,,இரவுமட்டுமே,,விடிந்ததே அன்றி,,,என் வாழ்கை விடியமருக்கிறது ஏனோ,,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (1-Oct-12, 8:44 pm)
பார்வை : 598

மேலே