செயற்கரிய யாவுள நட்பின்

நட்பு நுகர்தல் நானிலத்தில்
நுண்ணிய நூர்த்தல் எனக் கண்டேன்
எப்படி புகுதல்
எப்படி நகர்தல்
எதில் நிலைத்தல் - இதை
நயந்து சொல்ல நான் வந்தேன்

கண்ணியமும் மெய்த்தலும் கலந்து
பற்றுதலும் பிரியமும் பிரியாமல்
எந்த வினையும் பிரிவினை பண்ணாமல்
எண்ணாமல் எதுவொன்றும் செய்யாமல்
ஊக்கமுடன் உணர்ந்ததை உரையாடி
உள்ளம் கள்ளமின்றி
உள்ளொன்றும் புறமொன்றும் தருவதின்றி
உள்ளதை உள்ளபடி திறந்து காட்டி
சிறந்ததை ஈந்திடு
கசந்ததை மறந்திடு
தோள் கொடுக்க விரைந்திடு
கேளாமல் தேடாமல் கையில் சேர்ந்திடு
இறுதிவரை இருந்திட
இருக்க நிலை இருந்து இறங்கிவர
எப்போதும் இணங்கிடு

இப்படியெல்லாம் இருத்தலே
நட்பு வயப்பட்டோருக்கு வியப்பாகும்
இவையாவும் வாழ்வு ஒருவருக்கு
வழங்கும் கொடையாகும்
ஆதலின் அவசியமாய்
இப்படியொரு நட்பு வேண்டுமென கொள்வீர்...!

எழுதியவர் : Raymond (1-Jun-14, 5:49 am)
பார்வை : 196

மேலே