ஞாபகங்களும் அதன் அனுபவங்களும்
பள்ளி படிப்பு முடித்து
பட்ட படிப்பு சேர்ந்து
பட்டங்களும் பதக்கங்களும் வென்று
பட்ட படிப்பு முடித்தேன்
பன்னாட்டு நிறுவனத்தில் பணிசேர்ந்தேன்
என்நாடு விட்டு
எவன் நாட்டுக்கோ போய்
ஏராளமாய் சேர்த்து
தாராளமாய் காசிறைத்து
அன்மையில் வாங்கிய அடுக்கு மாடி ஒன்றில்
தனிமையில் கண்மூடிய போது
சேர்த்த பணமோ பார்த்த இடமோ
தராத இன்பத்தை தந்த ஞாபங்களை கேளும்!!!
அழகிய திங்கள் ஒன்றில்
அப்பா அம்மா
அருகில் உள்ள பள்ளி சேர்த்து விட
தாய் மடி அமர்ந்து பழகிய நான்
பள்ளி மர பெஞ்சில் அமர்ந்தேன்
அது கலைத்தாய் மடி என்றறியாத மடையன் நான் அப்பொழுது
அருகிலே அழுகையோடு சிலர்
முன்னால் அதிரிச்சியில் சிலர்
பின்னால் பிரமிப்பில் சிலர்
வாழ் நாள் நண்பரை எல்லாம் நான்
முதல் நாள் பார்த்த ஞாபகம்
அழுகைகள் மாறி
அரட்டைகள் அரங்கேறி
அன்பு பெருகிய ஞாபகம்
நண்பன் உறவு உண்டான ஞாபகம்
மரத்தடி மாற்றிய டிபன் சாப்பாட்டு ஞாபகம்
பத்து பைசா காசுக்கு-நாவல் பழத்தோடு
பாசத்தை பார்சல் செய்த
பெட்டி கடை
பாட்டியின் ஞாபகம்
அன்பு பரிமாற்றத்தின் அடையாளமாய்
காக்காய் கடி கடித்த மிட்டாய் ஞாபகம்
இவை ஞாபகங்கள் மட்டுமல்ல
அனுபவங்களும் கூட
பகிர்ந்து வாழ கற்றுக்குடுத்தார்கள் நண்பர்கள்
பாசத்தோட வாழ கற்றுக்குடுத்தாள்
பெட்டிக்கடை பாட்டி
அனுபவங்களில் கற்றது அழியமால் நிற்குது
பட்ட படிப்பில் கற்றது ???