ரவிபாரதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரவிபாரதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Jun-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jun-2011
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  21

என்னைப் பற்றி...

நூலகர், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை

என் படைப்புகள்
ரவிபாரதி செய்திகள்
ரவிபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2018 4:15 pm

விருந்துகள் கண்டே
பருந்துகள் பறக்கும்
வருந்துவதால் தீராது
மருந்துகள் வேண்டும்!

அகமலர் சொக்கும்
முகமலர்த் தேடல்களில்
சோகம் சூம்பி
சுகம் கூடிட வேண்டும்!

பொய்மைகளின் புகழ்
வாய்மைகளில் சலவைத்
தூய்மை செய்யப்படும்
வாய்ப்பு வேண்டும்!

எத்திசையும் இங்கு
ஒத்திசைவாய் கூடி
மத்திமம் நிலைபெற்ற
புத்தியும் வேண்டும்!

கொஞ்சு தமிழ் எங்கும்
மிஞ்சியிருக்கையில்
நஞ்சுமொழி பரவலாய்
விஞ்சுவதா வேண்டும்!

பாட்டிகள் சொன்ன
குட்டிக்கதைகள் யாவும்
பெட்டித் திரைகளில்
முட்டுவதா வேண்டும்!

நமக்கென்ன என்று
உமக்கென்ன என்று
ஓரங்க நாடகங்கள்
ஒழிக்கப்பட வேண்டும்!

மெத்தனப் போக்கில்
எத்தனை நாட்கள

மேலும்

அருமை தோழரே 28-Aug-2018 8:04 pm
ரவிபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2018 11:36 am

பருவ வாசலில்
புதுக் கோலமுடன்
பள பளக்கும்
பதுமை நான். . . .

பாலை வனத்தினில்
பாதி பயணத்தில்
பருகி இளைப்பாற
படைக்கப்பட்டச் சுனை நான். . . .

மோக வனத்தினில்
மேயும் தீயினுள்
மறைந்து... சிக்காமல்
மலரும் பனி நான். . . . .

நந்த வனத்தினில்
நட்ட செடிகளில்
நல் மனம் விரும்பும்
நாணும் மலர் நான். . . .

இரவுப் பொழுதினில்
இமைகள் நடுவினில்
இன்னிசை நரம்பை உன்
இதயம் அனுப்பும் வஞ்சி நான். . . .

வண்டுகள் உணராத
வாண்டுகள் நட்போடு
வண்ணம் அறியாத
வயது வந்தும் வராத அரும்பு நான். . . .

எகனை முகனைகளில்
ஏற்ற இறக்கங்களில்
என்னவென்று உணராத
ஏகலைவனின் நிழல் நான். . . .

மேலும்

பாலைவன காற்றாக நான் அலைகிறேன். பூங்காற்றாக அவள் வாழ்கிறாள். வாழ்க்கை சில போது பலருக்கு அன்பிலும் எதிர்மறையாகி விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 6:05 pm
ரவிபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2017 12:08 pm

சாத்திரம் பேசியே சூத்திரம் புகுத்திடும்
தரித்திரர் வாருங்கள்! - உங்கள்
புரட்சிகள் முளைக்கும் பாக்களைத் தூவி
சரித்திரம் செய்யுங்கள்!!

மேலும்

பலரின் தன்மை சூரியனை கண்டால் காய்ந்து விடும் பனித்துளி போன்றதாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 8:10 am
ரவிபாரதி - ரவிபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2017 11:01 am

தமிழ் இலக்கியக் காளைகள்
துள்ளி வெளிவரும் வாடிவாசல்!

நேசிப்போர் தழுவிக்கொள்க!
யோசிப்போர் பழகிக்கொள்க!!

இணைய மேய்ச்சலில் இணங்கியே
வளைய வருவோம் நம் வாசலில்!

பிணையக் கைதிகளாய் பிறமொழிகள்
பெயர்த்ததை மராமத்து செய்திடுவோம்!

இலக்கிய பிணக்குகளை புறந்தள்ளி
ஏற்றி வைப்போம் தமிழ் தீபம்!

உலுக்கிய கொடுமைகளை தமிழர் பிஞ்சுகள்
அகழ்வாராய்ச்சியில் அறிந்து கொள்ளட்டும்!

செந்தூர வானின் சிவந்த இதழ்களை
கொஞ்சம் கொய்துவிட்டு போகட்டும்!

நிலாமுற்ற நெடுநாள் தவங்களில் காதல்
உலா வந்து விலா நோகட்டும்!

பலாக்கனி சுவைத்தேனில் பாலும் பழமும்
துழாவி விழாக்கோலம் பூனட்டும்!

சிந்தனைச்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே