தேவதைவாதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தேவதைவாதி
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2013
பார்த்தவர்கள்:  364
புள்ளி:  20

என் படைப்புகள்
தேவதைவாதி செய்திகள்
தேவதைவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2015 8:02 pm

அவள் விழிகளோ ஈர்க்கும் விசை
அவள் குரலோ மயக்கும் இசை
செல் எங்கும் பாயும் அவள் பார்வை வீச்சு
சொல் எங்கும் நயம் அவள் கோர்வை பேச்சு
நெஞ்சம் முழுதும் நினைவுகள் அவளை சுற்றி
கொஞ்சம் எழுதும் கனவுகள் காதல் ஊற்றி
நாளெல்லாம் சொல்லலாம் அவள் அழகைப் பற்றி
நானெல்லாம் சொன்னால் வார்த்தைகள் போகும் வற்றி
கவிதை பேசும் என் மொழிகள் மெளனமாக தடுமாற
கதை பேசும் அவள் விழிகள் மனமாக இடமாற
அவளுடன் இருக்கும் என் நேரங்கள்
காதலால் களவாடபடுகின்றன...

Disclaimer : யாரவள் என்று கேட்டால் / சொன்னால்
என் மனைவி ஆகி விடுவாள் காளி
அப்புறம் அவ்ளோ தான் நான் காலி

மேலும்

தேவதைவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2015 7:56 pm

காதல்...
அளவாக நினைத்தேன் என்னில் அடங்கவில்லை
அளக்க நினைத்தேன் எண்ணில் அடங்கவில்லை

அவள்
சொல்லி போனால் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்
சொல்லாது போனால் மனதில் ஒழித்துக் கொண்டே இறக்கும்

மனதை
பறித்த போது இதயம் பறக்க வலி தெரியவில்லை
முறித்த போது இதயம் மறக்க வழி தெரியவில்லை

காதல்...
நினைவிலும் நீங்கா கனவுகள் அழிக்கும்
கனவிலும் நீங்கா நினைவுகள் அளிக்கும்...

காதலில்
இதயம் இப்படித்தான் காயும்
மனைவி இதப்படித்தால் காயம்...

மேலும்

தேவதைவாதி - தேவதைவாதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2014 9:19 am

மெல்லினம் என்று வர்ணிக்க வேண்டாம் 
'மேல்'இனம் என்று ஆதிக்கம் வேண்டாம் 
வல்லினம் என்று நிருபிக்க வேண்டாம் 
'வள்'இனம் ஆக நடக்காமல் இருந்தால் போதும்...

மேலும்

தேவதைவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2014 9:19 am

மெல்லினம் என்று வர்ணிக்க வேண்டாம் 
'மேல்'இனம் என்று ஆதிக்கம் வேண்டாம் 
வல்லினம் என்று நிருபிக்க வேண்டாம் 
'வள்'இனம் ஆக நடக்காமல் இருந்தால் போதும்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே