காதல்

காதல்...
அளவாக நினைத்தேன் என்னில் அடங்கவில்லை
அளக்க நினைத்தேன் எண்ணில் அடங்கவில்லை

அவள்
சொல்லி போனால் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்
சொல்லாது போனால் மனதில் ஒழித்துக் கொண்டே இறக்கும்

மனதை
பறித்த போது இதயம் பறக்க வலி தெரியவில்லை
முறித்த போது இதயம் மறக்க வழி தெரியவில்லை

காதல்...
நினைவிலும் நீங்கா கனவுகள் அழிக்கும்
கனவிலும் நீங்கா நினைவுகள் அளிக்கும்...

காதலில்
இதயம் இப்படித்தான் காயும்
மனைவி இதப்படித்தால் காயம்...

எழுதியவர் : தேவதைவாதி (1-Apr-15, 7:56 pm)
சேர்த்தது : தேவதைவாதி
Tanglish : kaadhal
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே