காதலானவள்

அவள் விழிகளோ ஈர்க்கும் விசை
அவள் குரலோ மயக்கும் இசை
செல் எங்கும் பாயும் அவள் பார்வை வீச்சு
சொல் எங்கும் நயம் அவள் கோர்வை பேச்சு
நெஞ்சம் முழுதும் நினைவுகள் அவளை சுற்றி
கொஞ்சம் எழுதும் கனவுகள் காதல் ஊற்றி
நாளெல்லாம் சொல்லலாம் அவள் அழகைப் பற்றி
நானெல்லாம் சொன்னால் வார்த்தைகள் போகும் வற்றி
கவிதை பேசும் என் மொழிகள் மெளனமாக தடுமாற
கதை பேசும் அவள் விழிகள் மனமாக இடமாற
அவளுடன் இருக்கும் என் நேரங்கள்
காதலால் களவாடபடுகின்றன...

Disclaimer : யாரவள் என்று கேட்டால் / சொன்னால்
என் மனைவி ஆகி விடுவாள் காளி
அப்புறம் அவ்ளோ தான் நான் காலி

எழுதியவர் : தேவதைவாதி (1-Apr-15, 8:02 pm)
சேர்த்தது : தேவதைவாதி
பார்வை : 94

மேலே