சந்திரகார்த்திகா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சந்திரகார்த்திகா |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 30-Nov-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 446 |
புள்ளி | : 84 |
கவிதைகளைச் சுமந்து பறந்தவள்...இப்போதெல்லாம்தேவதைகளைச் சுமந்து கொண்டு பறக்கிறேன்...
தினமும் காலையில்
காபியில் சர்க்கரையோடு காதலையும்
கலந்து தருவார் என்னவர்..
என்னவனின் கரம் பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல் நிற்கிறது
நினைவினில்...
அன்றுமுதல் இன்றுவரை
அவன் அன்பின் துளிகள் யாவும் அமுதசுரபி போல் பல்கி பெருகுகிறது...
அவனை யாதுமானவன் என்றால்
பிழை ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது...
என்னவனின் கரம் பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல் நிற்கிறது
நினைவினில்...
அன்றுமுதல் இன்றுவரை
அவன் அன்பின் துளிகள் யாவும் அமுதசுரபி போல் பல்கி பெருகுகிறது...
அவனை யாதுமானவன் என்றால்
பிழை ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது...
அப்பப்பா...
எத்தனை வலிமைமிக்கவர்கள்...
எத்தனை வலியும் மிக்கவர்கள்...
எட்டாக்கனியாகவே இருக்கிறது பெண்களுக்கு பணியிடப்பாதுகாப்பு ...
வயதுவந்த பெண்களுக்கே இந்நிலையெனில்
வயது பிள்ளைகளையும் பிஞ்சுக்குழந்தைகளையும்
எண்ணிப்பார்க்க நினைத்தால்
நெஞ்சம் பதறுகிறது...
திட்டம் வகுத்தது அரசு
பெண்சிசுக் கொலையைத்தடுக்க
திட்டத்தை நிறைவேற்றியது
சட்டசபையில்
இனி பிறக்கும் பெண் குழந்தைக்கு
வருடம் பத்தாயிரம் வளர்ப்பு நிதியாம்
பதினேலாவது வயதில்
கல்விக்காக இரண்டு லட்சமாம்
இருபத்தியோராவது வயதில்
திருமணத்திற்காக மூன்று லட்சமாம்
ஆனால்,
நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று
திட்டம் தீட்டியும்
நடந்தது சிசுக்கொலை
ஆச்சர்யமாக உள்ளதா...
நடந்தது ஆண் சிசுக்கொலை...
[இது கற்பனையே... உண்மையல்ல...]
மேலிருந்து கீழே
விழுந்ததற்காக
வருத்தம் வேண்டாம் -
உன்னாலும் ஏற்றம்
காண முடியும்
அடி சறுக்கியதற்காக
அழுது நின்றால்
உன் கண்ணீரில்
நீந்திச் சென்றுவிடும் ,
வெற்றி வேறொருவரிடம்
அனைத்தும் உன்னிடமே
இருந்தும் எதற்காகக்
கவலைப்படுகிறாய்
உன்னை மற்றவர்
அறியாததற்காகவா
பிறர் பாராட்டால்
அறிவு வளர்வதில்லை
புத்திசாலிகள்
புதையுண்டு கிடைப்பதுமில்லை
முளைவிட்ட விதை
விருட்சமாவதும்
முட்செடியாவதும்
உன் கைகளில் மட்டுமே
உனக்கான தருணங்களை நீ
தேடிச் செல்வதைவிட
இன்றைய நொடிகளை
உன்னுடையதாக்கு
தேடாமல் தேடி வரும்
உன் நேரம்,
புதுப்புது வெற்றிகளின்
துணைகொண்டு!!
வழியில் நின்ற கொக்கு
வழிமறைத்துதான் நிற்கிறது
என நினைத்து
வழிமாறி வயலுக்கு ஓடியது
ஒரு மீன்!...
அங்கே பல கொக்குகள்
காத்துக்கிடக்கின்றன
என தெரியாமல்.............
------இது தான் மனிதனின் வாழ்க்கை
நண்பர்கள் (8)

மலர்91
தமிழகம்

kirupa ganesh
Chennai

Ram
சென்னை

நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி
