Ram - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ram
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2012
பார்த்தவர்கள்:  216
புள்ளி:  53

என்னைப் பற்றி...

என் கண்களும் கவிதைகளும் என்னைப் பற்றி பேசும் !
கவிதைகள் உம்மை நெஞ்சார நெருங்கி விட்டால்
மொழியிலா மௌனச் சத்தம் நம்மிடையே பரிமாறியிருக்கும் !

என் படைப்புகள்
Ram செய்திகள்
Ram - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2015 10:23 pm

பல நாள் பிரிந்து மீண்டும்
உன்னோடு கூடிய அந்த இரவு !

கருமேக காதலில் வெக்கமிட்டு
ஒளிந்தும் தெரிந்தும் ஒளிர்ந்த
அத்தேய்பிறை நிலவின்
ஒற்றை ஒளிக்கீறல்
ஜன்னலின் வழியே
உன் உதடுகளின்
நுனி ஈரத்தில் மிளிர ,
ஈரத்தில் நான் நனைந்த
இடைவெளியில் நீ
செல்லமாய் நிலவை நோக்கி

" பார் ... நீ மிச்சம் வைத்த
ஈர முத்தம் அதோ அங்கே..
இனி எக்கணம் எனை நீ பிரிந்தாலும்
உன் மிச்சத்தின் பொறுப்பை
அது கூறும் உனக்கு "

உன் கீழ் உதடு என் கீழ் உதட்டை மெல்ல அழுத்த
நம் சுவாசம் மோத ஏக்கமாய் நெருங்கிய நீ
"எனை இப்பொழுதே முழுமதி ஆகவிடு "

அந்நொடி உன் கருவிழி எங்கும்
தேயும் தேய் பிறை நிலவு மட்டும்

மேலும்

ரசணை அழகு 31-Aug-2018 6:02 pm
Ram - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 12:07 am

அன்பு - அழுத்திக் காட்டிவிடு
ஆலயம் - அறிவியலாய் பார்வையிடு
இன்பம் - இன்றைக்கே சுவைத்துவிடு
ஈரம் - மனிதமாய் மாற்றிவிடு
உண்மை - உளமார பகிர்ந்துவிடு
ஊர் - மதித்துப் புறத்திலிடு
எழுத்து - கசடறக் கற்றுவிடு
ஏழ்மை - வாழ்ந்து கழித்துவிடு
ஐதீகம் - உடைத்துப் பார்த்துவிடு
ஒழுக்கம் - விதையென விதைத்துவிடு
ஓம் - பிரணவமென உணர்ந்துவிடு
ஔடதம் - உணவிலே உட்கொண்டுவிடு !

மேலும்

Ram - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 3:19 am

புணர்ந்து அயர்ந்திருக்கும் தருணத்தில்
அவள் காதின் மடல்களை கடித்தவாறு அவன்
"நமக்காய் எத்தனை பிள்ளைகள் வேண்டுமடி உனக்கு ?"

காமமாய் கண்கள் சுருக்கி அவள்
"உன் ஒவ்வொரு புது முத்தத்திற்கும் ஒவ்வொன்று "

சின்ன கேலிச் சிரிப்புடன் அவன்
"பின் விடியும் பொழுது வையமெங்கும்
நம் குழந்தைகள் மட்டும் தான் !! "

மேலும்

அடேங்கப்பா ஆசையப் பாரு... நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 03-Jan-2015 10:16 pm
Ram - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2014 10:18 pm

என் மீது மொத்தமாய் விழுந்து
இதழோடு ஆழ முத்தமாய் பகிர்ந்து
முழு நீள கூந்தல் கொண்டு
என் முகம் தனை மூழ்கடித்தாய் ,
அந்நொடியில்
ஜன்னலின் ஓரமாய் மிளிர்ந்த
அந்திநேர சூரியன் கூட
கரும் இருட்டில் மறைந்ததடி !

மேலும்

ஆஹா அழகு .. தொடருங்கள் .. வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 1:36 pm
Ram - Ram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2014 8:39 pm

மனக்கருவுற்றதால் என்னவோ
இன்று நீ உயிர்க்கருவுற்றதை
அறிந்த நொடியிலிருந்து
வாழ்வில் முதல்முறையாய்
அறுபது நிமிடமாய் அழுகிறேன் !
ஆனந்த நெகிழ்ச்சி நிசப்தமாய்
நிறைய நிறைய !

என்னை சுற்றி தான் எங்கோ இருக்கிறாய்
என் சுவாசமும் என்றோ ஒருமுறை உன்னை
தீண்டி தான் தாண்டுது !

இன்று
நீ யவன் மனைவியோ என்றாலும்
யாரோ முன்றாமவள் என்றாலும்
ஏனோ இந்நற்செய்தி கொண்டு
பாவை உன்னை ஓரமாய் நின்றாவது பார்க்க
பாவி என் ஆண் நெஞ்சம் பாடாய் படுத்துது !

வெளிக்காட்ட இயலா பெருமளவில்
பெரும் நேசம் இன்று வரை
இருவர் மீது கொட்டியிருந்தேன்- அது
என் அம்மா - பின்
எனை 'அம்மா' என்றழைத்த நீ !
இனி
உன்

மேலும்

பெண்ணின் உள்ளிருக்கும் பெண்மையை முழுதாய் நேசிக்கும் யாருக்கும் இது புரியும் ! 06-Nov-2014 7:17 pm
இப்படியும் எண்ணம் தோன்றுமா ..??? 06-Nov-2014 2:38 pm
Ram - Ram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2014 12:16 am

ஓரப்பார்வை பருவத்தாக்கம்
கைபேசி காதலான பின் சந்திக்கும்
முதல் கள்ளச் சந்திப்பின்
மயக்க மாலை அன்று !

முதல் முத்தத்தின் மொத்த பரிணாமும்
மோகத்தில் கற்பனையாய்ச் சேர்ந்து
கண் முன்னே காட்சியாய்
வந்து வந்து போனது இருவருக்கும் !

யாருமில்லா வீட்டு முற்றத்தில்
கம்பியிட்ட கதவுகளின் பின்னே
கண்ணெல்லாம் பெண் காதற்காமம்
நிரம்பி விசும்பி ததும்பி இருந்த
உன் கன்னிக் கண்களை
கண்டுகொண்டே நுழைந்தேன் உள்ளே !

கண்ட கணத்தில் உன் கண்கள் விரிய
புருவம் பெருக உள் மூச்சு பெரிதாக
கழுத்து உள் வாங்கி கீழ் உதடு
மடிந்து சுருங்கி நெடிந்த காட்சி
வள்ளுவனின் மொத்த காமத்துப்பாலையும்
ஒரே நொடியில

மேலும்

மிக்க நன்றி :-) 02-Jul-2014 2:14 am
மிகவும் ரசித்து படித்தேன்.... முத்த மழையில் மொத்தமாய் நனைந்தீரோ....? அடடடடா..... படைப்பு மிக அருமை 02-Jul-2014 1:35 am
Ram - Ram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2014 2:14 pm

அத்தனை இன்னல்களும் தாண்டி
ஆயிரமாயிரம் பொய்களும் கூறி
தொட இயலா தொலைவினை கடந்து
கண்கள் பார்த்து கன்னங்கள் சிவந்து
முதல் முறையாய் காதல் உரைத்து
கண்ணீர் ததும்ப முத்தங்கள் இட ,
அந்த இருட்டறை திரையரங்கில்
இசைத்தருண இறை அருளாய்
இப்பாடல் தொடங்கிய நொடி
இன்றும் என்னை இசைக்குதடி !
வெட்கத்தில் நீ ஒப்படைத்த
உன் கைவிரல்களின் எஞ்சிய நகங்களை
நானே கடித்து அகற்றி
அலைபேசிக்கு அடியில்
ஒளித்து வைத்து சேமித்த
செம்மை நினைவுகள்
செழிக்கிறது இன்றும் !

மேலும்

அருமை தோழரே 14-Jun-2014 3:50 am
:-) 30-May-2014 2:21 pm
நன்று 29-May-2014 4:25 pm
Ram அளித்த படைப்பில் (public) chanthirakarthika மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2014 11:55 pm

கண்ட முதல் நாள் தெரியவில்லை
கதை பேசிய முதல் நாள் தெரியவில்லை
உறவாடிய முதல் நாள் தெரியவில்லை
உலகை கண்களால் உணர்ந்து என்று கண்டேனோ
அன்றிருந்து என்னோடு எனக்காய் இருக்கிறாய்..!

நீ யார் என்பதை அறிய வயது அன்று இல்லை
உன்னை யாரென்று அழைப்பேன்
என்ற பெயர் அன்று புலப்படவில்லை..!
எனை விட சற்று உயரமாய்
குட்டை பாவடையில் என்னை 'குட்டி தம்பி ' என
நீ அழைத்து அணைத்துக் கொஞ்சிய சிறு சிறு நினைவுகள்,
உன் நேசமும் வாசமும் நன்றாய் புரிந்தது
எனக்கு நலமாய் கூட இனித்தது..
காரணமின்றி தாயை நேசிப்பதாய்
கண்ட நாளில் இருந்து
உன்னையும் நேசித்திருக்கிறேன்..!

சுற்றம் சொல்லியே இவ்வுறவின் பெயர் தெரிந

மேலும்

நன்றி :-) 16-Mar-2014 12:33 am
சகோதரரே,நானும் ஒரு தமக்கை என்ற வகையில் உங்கள் கவிதையை என்னால் உணர முடிகிறது.மிக அருமை 14-Mar-2014 6:12 pm
நன்றி மணியன் ! 02-Mar-2014 8:24 pm
தமக்கைக்கு உகந்த கருத்துள்ள படைப்பு ( மணியன் ), 02-Mar-2014 8:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

sankarsasi

sankarsasi

chennai
kavimani.s

kavimani.s

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

sankarsasi

sankarsasi

chennai
kavimani.s

kavimani.s

சென்னை
மேலே