இசைத்தருண முத்தப்பாடல்

அத்தனை இன்னல்களும் தாண்டி
ஆயிரமாயிரம் பொய்களும் கூறி
தொட இயலா தொலைவினை கடந்து
கண்கள் பார்த்து கன்னங்கள் சிவந்து
முதல் முறையாய் காதல் உரைத்து
கண்ணீர் ததும்ப முத்தங்கள் இட ,
அந்த இருட்டறை திரையரங்கில்
இசைத்தருண இறை அருளாய்
இப்பாடல் தொடங்கிய நொடி
இன்றும் என்னை இசைக்குதடி !
வெட்கத்தில் நீ ஒப்படைத்த
உன் கைவிரல்களின் எஞ்சிய நகங்களை
நானே கடித்து அகற்றி
அலைபேசிக்கு அடியில்
ஒளித்து வைத்து சேமித்த
செம்மை நினைவுகள்
செழிக்கிறது இன்றும் !

எழுதியவர் : ராம் (29-May-14, 2:14 pm)
பார்வை : 96

மேலே