காதல் வயப்பட்ட தலைவி
என்ன சுகம் உன் பெயர் சொல்ல
வந்த முதல் நான் பலமுறை சொல்ல
அந்த சுகம் பலமடங்கு பெருக
என்பெயரை உன் பெயர் முன் சேர்க்க
நல்ல வரம் தர ஒருமுறை வாடா
கனவில் அல்ல என்முன்னே நேரில் திருடா
என்ன முரடு உன் கையை தொட
தெரிந்தும் பலநாள் ஏங்கி நான் வேண்ட
அந்த சுகம் பலமடங்கு பெருக
என்கையை உன்கை பிடித்து நசுக்க
நல்ல வரம் தர ஒருமுறை வாடா
கனவில் அல்ல என்முன்னே நேரில் திருடா
என்ன கிறுக்கு உன் குணம் பழக
இருந்தும் ஒற்றை காலில் முரண்டு பிடிக்க
அந்த சுகம் பலமடங்கு பெருக
என்னையும் உன்போல் கிறுக்காகி ரசிக்க
நல்ல வரம் தர ஒருமுறை வாடா
கனவில் அல்ல என்முன்னே நேரில் திருடா
என்ன நிறம் உன் மாநிறம் பார்க்க
இருந்தும் அதை நாளெல்லாம் பார்க்க தவிக்க
அந்த சுகம் பலமடங்கு பெருக
என் மேனிஎழிலும் வனப்பும் உன்முன் தோற்க
நல்ல வரம் தர ஒருமுறை வாடா
கனவில் அல்ல என்முன்னே நேரில் திருடா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
