கிறு கிறு கிறுக்கல் ~~✿ சந்தோஷ் ✿

உனை நினைத்தால்
என் பேனா
தானாக எழுதுகிறது
உன்னையும் என்னையும்
காதல் தாளில்...கவிதையாக!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் இதயம் நடத்திய
கணக்கெடுப்பின் படி,
உன் மீதான காதலில்
என்னை நான் தொலைத்தது
இது நூறாவது முறையாம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை பிடிக்குமா என்றாய்?
உன்னை பிடித்து எனக்கு
பைத்தியம் பிடித்ததை
எப்படி நான் சொல்வேனடி..!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன பிடிக்கும்.. ?என்றேன்..
என்னை பிடிக்கும் என்பாய்
என்ற எதிர்பார்ப்பில்..
என்னிதயத்துடிப்பு எகிறியது .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் கண்
ஏன் பிடிக்கும்
என்றாள்...!
எழுதினேன் இப்படி...

” உந்தன் விழிகள்…
வெள்ளை நீரோடையில்
கருப்பு முழி ஓடம்.
விழி கரைகளாம்
இமைகளில் அழகிய
மை கோலம். ”

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (29-May-14, 1:52 pm)
பார்வை : 231

மேலே