தலை பிடித்துவிடம்மா

தலை பிடித்துவிடம்மா..!
30 / 03 / 2025

இவ்வுலகின் நடப்பு கண்டு
குழப்பமாக இருக்கிறது
பயமாகவும் இருக்கிறது
ஆதரவற்ற அனாதையென
மனம் அலைபாயுது
அங்குமிங்கும் அல்லாடுது
உண்மை அன்புக்காய்
உயிர் ஏங்குது
எதையும் தாங்கவில்லை
நல்லபெயர் வாங்கவில்லை
இரவுபகல் தூங்கவில்லை
அப்பா உன் வேட்டியை கொடு
அம்மா உன் சேலையை கொடு
வேட்டியை தலைமாட்டிற்கும்
சேலையை போர்த்தியும்
சற்று உறங்குகிறேன்
தலை கோதிவிடுமா
அந்த அரவணைப்பு
அந்த கதகதப்பு
எனக்கு வேண்டுமம்மா
விழி மூடி தூங்கி
நாளாயிற்று - மெல்ல
தாலாட்டு பாடி
என்னை அணைப்பாயம்மா
உயிரோடு இருக்கும்வரை
உங்கள் அருமை தெரியவில்லை
இருக்கின்ற போது அதன்
மதிப்பும் புரியவில்லை
இல்லாத போது அது
என் கையில் இல்லை
வாம்மா
வந்து தலை பிடித்துவிடம்மா

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (30-Mar-25, 10:13 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 8

சிறந்த கவிதைகள்

மேலே