காதல் ஜல்லிக்கட்டு

அழகை எல்லாம் மொத்த குத்தகை
எடுத்ததால் பூக்கள் எல்லாம் உன்மேல் பகை
மனதை எல்லாம் பகல் கொள்ளை
அடிப்பதால் கனவுகள் இனிமேல் உனக்கு இல்லை
மதியாமல் ஒய்யார நடை போடுகிறாய்
மிதிபட்ட எங்களை பாதை எங்கும் வீசுகிறாய்
சதி செய்து உன்னை நெருங்க பார்த்தல்
கதிகலங்க வைத்து ஒருமுறை முறைக்கிறாய்
காதல் தேசம் கனவு கதாநாயகி ஏன்
கொடுங்கோல் ஆட்சி இப்படி நடத்துகிறாய்
உன்னை அடக்கி ஆள்வதற்கு நான்
தயாரா என ஜல்லிக்கட்டுக்கு அழைக்கிறாய்