என் உயிரெழுத்துக்கள்
அன்பு - அழுத்திக் காட்டிவிடு
ஆலயம் - அறிவியலாய் பார்வையிடு
இன்பம் - இன்றைக்கே சுவைத்துவிடு
ஈரம் - மனிதமாய் மாற்றிவிடு
உண்மை - உளமார பகிர்ந்துவிடு
ஊர் - மதித்துப் புறத்திலிடு
எழுத்து - கசடறக் கற்றுவிடு
ஏழ்மை - வாழ்ந்து கழித்துவிடு
ஐதீகம் - உடைத்துப் பார்த்துவிடு
ஒழுக்கம் - விதையென விதைத்துவிடு
ஓம் - பிரணவமென உணர்ந்துவிடு
ஔடதம் - உணவிலே உட்கொண்டுவிடு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஒரு நிக்கல்...
கவின் சாரலன்
18-Mar-2025

உத்தமர்...
தருமராசு த பெ முனுசாமி
18-Mar-2025
