மூச்சுவாங்கிய முதல் முத்தம்

ஓரப்பார்வை பருவத்தாக்கம்
கைபேசி காதலான பின் சந்திக்கும்
முதல் கள்ளச் சந்திப்பின்
மயக்க மாலை அன்று !

முதல் முத்தத்தின் மொத்த பரிணாமும்
மோகத்தில் கற்பனையாய்ச் சேர்ந்து
கண் முன்னே காட்சியாய்
வந்து வந்து போனது இருவருக்கும் !

யாருமில்லா வீட்டு முற்றத்தில்
கம்பியிட்ட கதவுகளின் பின்னே
கண்ணெல்லாம் பெண் காதற்காமம்
நிரம்பி விசும்பி ததும்பி இருந்த
உன் கன்னிக் கண்களை
கண்டுகொண்டே நுழைந்தேன் உள்ளே !

கண்ட கணத்தில் உன் கண்கள் விரிய
புருவம் பெருக உள் மூச்சு பெரிதாக
கழுத்து உள் வாங்கி கீழ் உதடு
மடிந்து சுருங்கி நெடிந்த காட்சி
வள்ளுவனின் மொத்த காமத்துப்பாலையும்
ஒரே நொடியில் ஊற்றியது உதிரத்தில் !

நெருங்க தகுந்த தருணம் நோக்கி
நெடுந்த வாசல் கதவுக்கு
நெருக்கமாய் நின்றிருந்தேன் !
தேகம் சூடாக தேடல் விரைவாக
தாக்கம் தாளாமல் தடதடவென
தளிர்க் கன்னி உன்னை நெருங்கிவிட்டேன் !

எங்கிருந்து வந்த கலையோ ?!
யவன் தூண்டிய வலையோ ?!
கண்கள் நான்கும் மங்கலாக
கைகள் இருபது எண்களாக
முத்தங்கள் விழும் தடம் கூட மறந்து
மொத்தமாய் அவை நம்மை ஆட்சி செய்ய
உன் சருமத்தின் ரோமங்களும் பருக்களும் கூட
என் ஆண்மை மயக்கி இழுக்க
எச்சில் ஈரம் மிஞ்சியபின்னே தான்
தெரிந்தது முத்தம் முடிந்த இடம்
ஈரடி இலகு உதடுகள் என,
கலைத்து விட்டு கண் பார்த்தபின்
நம் கண்ணில் தென்பட்டது
நாம் துடைக்க மறந்த எச்சில் சுவடுகள் !

மெலிதாய் பூத்த பெருமித சிரிப்போடு
உன் சிறுவாய் மீட்ட ஈரம் துடைக்க
மெதுவாய் தூக்கிய என் கைகளிரண்டை
விரைவாய் தட்டி விரட்டி முரட்டாய்
இறுக்கி அனைத்து உதடை கடித்து இழுத்து
என் கற்பை ஆணவமாய் ஆண்டுவிட்டாய் !
ஆம் மறுபடியும் தான் !

குசும்பாய் கண்கள் பார்த்து புருவம் தூக்கி
நகையாடி சிரித்தாய் நீ வென்றுவிட்டதாய் !
அந்நொடியில் ஆணும் பெண்ணும் எனும்
பேதம் உடைந்த பேரறிவு உணர்ந்தேன் !

ஏதோ சத்தம் கேட்க எதற்கு வம்பென்று
கிளம்பிவிட முடிவு செய்தாய் ,
முடிவென்னவோ மூளை செய்தாலும்
முத்தம் பதித்த தாக்கம்
என் சங்கதமிழ்ப்பெண் கண்களை
கண்ணீர் குள குட்டையாய் மாற்றியது !

நொடிகள் தவழ்ந்தது நெருக்கம் விரிந்தது
உன் கால்கள் வாசற் கதவைத் தொட்டது
முகம் மறைய தொடங்கியது உன்
மிதிவண்டி சத்தம் மெல்ல உருண்டது
என் மூளை மௌனித்தது
உள் சுவாசம் கனத்தது
தலை மெல்ல கவிழ்ந்தது !

சற்றென
சட தட வென
மிதிவண்டி விழுந்த ஒலியும்
தரை தேய்த்த செருப்பொலியும்
சின்ன கொலுசொலியும் சந்தத்தில் சேர்ந்து
குற்றாலச் சாரக் காற்றோடு கலந்து
காதுகளைத் துளைத்தது !

என்ன அது என ஏறெடுத்து பார்க்கும் முன்னே
நம் மூக்குகள் முட்டின
பிஞ்சு விரல்களால் என் கன்னங்கள் திருப்பி
உன் ஒரு கை என் முடி கோர
மறு கை எதிர் கன்னம் தாங்க
இரு உதடும் கன்னத்தில் இறுக்கி பதிய
இரு முத்தங்கள் அச்சிட்டு முகம் திருப்பி
முன்னே ஓடி விட்டாய் !

அச்சிட்ட ஈர வெப்பமும்
அக்காட்சி முற்றிட்ட உன்
கூந்தல் சீகை மணமும்
இதோ இன்றும் என்னுடன்
இப்படியாய் இக்கவியாய் !

எழுதியவர் : ராம் (2-Jul-14, 12:16 am)
பார்வை : 231

மேலே