கட்டளை இடு நீயே

கட்டளை இடு காதலின்
பெயராலே

கண்மணி நீயே உந்தன்
வாய் மொழியாலே

கட்டியும் இழுத்து வருவேன்
பெரும் மலையினையே

வெட்டியும் சாய்த்திடுவேன்
காதலுக்கு தடையாகும்
எந்த முட்புதரையுமே

விண்ணையும் எட்டி
பிடித்துடுவேன்

கொண்டு வர நீ கேட்ட
நட்சத்திரங்களை காதணி
ஆக்கி கொள்ளவே

கம்பனின் ஆவியையும்
அழைத்திடுவேன் உன்
துதி பாடிடவே

எந்த நீர் வேண்டுமென்றாலும்
தந்திடுவேன் உனக்கொரு
நீச்சல் குளம் கட்டி தருவதற்கே

அந்த நீரில் பன்னீரும், பரிமளங்களும்
சுகந்தங்களும் சேர்த்திடுவேன் நீ சுந்தரியாய்
குளித்தெழுவதற்க்கே

வான வில் நீ விளையாடிட கேட்டால்
விண்ணவனை கேட்டு வாங்கி
வந்திடுவேன் உன் தோட்டத்தில்
வைப்பதற்கே

வருணனின் மழைச்சாரலில் நனைந்திட
நீ விரும்புவேயானால், அதையும்
நடத்திடுவேன், வருணனை அடி
பணிந்தே

வாரணங்கள் அணிவகுத்திட உன்
வீட்டின் முன்னே, நீ கட்டளை இட்டால்
இந்திரனை கேட்டு கொண்டு வந்து
நிறுத்திடுவேன் உன் வாசலின் முன்னே

கட்டளை எல்லாமே நடத்தி
முடித்ததினால் கண்ணே நீ என்
காதலியாக வேண்டும் என
கட்டாயம் இல்லை

நான் உந்தன் காதலன், அதை
மாற்றிட யாராலும் முடியாது
அது போதும் எனக்கு.....!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (2-Jul-14, 4:21 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : kattalai idu neeye
பார்வை : 93

மேலே