கருவுற்றாள் முன்னாள் காதலி
மனக்கருவுற்றதால் என்னவோ
இன்று நீ உயிர்க்கருவுற்றதை
அறிந்த நொடியிலிருந்து
வாழ்வில் முதல்முறையாய்
அறுபது நிமிடமாய் அழுகிறேன் !
ஆனந்த நெகிழ்ச்சி நிசப்தமாய்
நிறைய நிறைய !
என்னை சுற்றி தான் எங்கோ இருக்கிறாய்
என் சுவாசமும் என்றோ ஒருமுறை உன்னை
தீண்டி தான் தாண்டுது !
இன்று
நீ யவன் மனைவியோ என்றாலும்
யாரோ முன்றாமவள் என்றாலும்
ஏனோ இந்நற்செய்தி கொண்டு
பாவை உன்னை ஓரமாய் நின்றாவது பார்க்க
பாவி என் ஆண் நெஞ்சம் பாடாய் படுத்துது !
வெளிக்காட்ட இயலா பெருமளவில்
பெரும் நேசம் இன்று வரை
இருவர் மீது கொட்டியிருந்தேன்- அது
என் அம்மா - பின்
எனை 'அம்மா' என்றழைத்த நீ !
இனி
உன்னை 'அம்மா' என்றழைக்கும்
பிள்ளையும் என் மூன்றாம் எண்ணில் !