அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டிக்கவிதை

இணையோடு படமெடுத்து
ஆடும் பாம்புகளும் !-தன்
இணையோடு இணைய தோகை
விரித்தாடும் ஆண் மயில்களும்! -தன்
இணையோடு இறுதிவரை
பிரியாமல் வாழும் நரிகளும் !-தன்
இணைக்காக ஆண் பறவைகள்
கட்டும் கூடுகளும் !-தன்
இணைக்காக இரைதேடி
வேட்டையாடும் பெண் சிங்கங்களும்! -தன்
இணைக்காக அடைகாக்கும்
ஆண் தீ கோழிகளும்!-தன்
இணையை கவர இசைபாடும்
ஆண் குயிலின் குரலும் !-தன்
இணை பிரசவிக்க இடம்
தேடும் ஆண் பூனைகளும் !-தன்
இணையின்றி உயிர் வாழா
காதல் பறவைகளும் !-தன்
இணைக்காக தன்னை மாற்றிக்
கொள்ளும் மனிதர்களும்!
அழகானவர்களே !
அவர்களுடைய வாழ்வும் !
அழகானதே!
"இணை" -இவ்வுலகில்
இறைவன் தந்த -ஓர்
இணையற்ற பரிசு!-அதை
முறையற்று வாழ்பவன் !-இவ்
உலகில் வாழ தகுதியற்றவன்!
அழகிய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கு !
அதுதான் உனக்கு ஆனந்தம் !